பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 254 என்று விலக்கினாய். இராமனைத் துணையாகக் கொள்வதே உன் நோக்கமாக உள்ளது. ‘வஞ்சனை மனத்தினை, பிறப்பு மாற்றினை நஞ்சினை உடன்கொடு வாழ்தல் நன்மையோ' என்றும், “நீ உடன் பிறந்தே கொல்லும் வியாதி, பழிச்சொல் உண்டாகுமே என்று கருதி உன்னை க்கொல்லாமல் விடுகிறேன். என் முன் நிற்காதே போ, நின்றால் உன்னைக் கொன்று விடுவேன்” என்றும் இராவணன் கடுங்கோபத்துடன் பேசி வீடணனை விரட்டினான். "பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை ஒழிகிலை புகலுதல் ஒல்லை நீங்குதி" “விழி யெதிர் நிற்றியேல் விளிதி என்றனன் அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.” என்று கம்பன் குறிப்பிடுகிறார். இச்சுடு சொற்களைக் கேட்ட வீடணன் தனது துணைவர்களுடன் வானத்தில் சென்று நின்று கொண்டு சில நல்லுரைகள் கூறினான். எப்படியும் உண்மை நிலையினை இராவணனுக்கு உணர்த்தி அவனை அழிவிலிருந்து மீட்க எண்ணினான். 'வாழியாய் கேட்டியாய் ! வாழ்வுகைம்(மிக ஊழி காண்குறும் நினது உயிரை ஓர் கிலாய் கீழ்மை யோர் சொற் கொடு கெடுதல் நேர்தியோ வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கும் ஆகுமோ?" என்று கூறி அறம் பிழைத்தவர்க்கு வாழ்வில்லை என்று எச்சரிக்கை செய்கிறான்.