பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 256 அவனைத் தனது அணியில் சேர்த்துக் கொண்டும், இராவணன் உயிரோடு இருக்கும் போதே இலங்கையின் அரசுப் பட்டத்தையும் வீடணனுக்குச் சூட்டினான். நடக்கப் போவதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்த வீடணன் தனக்கு அளித்த பட்டத்தை, 'அளவறு பெருமைச் செல்வம் அளித்தனை” எனவும் ‘வஞ்சனை கொண்ட அரக்கன் இராவணனுடைய தம்பியாகப் பிறந்த பாவம் தீரட்டும்” என்றும் குறிப்பிடுகிறான். வீடணன் தனது அண்ணனை விட்டு விட்டு பாசத்தை விட்டு விட்டுத் தெளிவாக அறத்தின் பால் வந்து சேர்ந்து விட்டான். இராமனுடன் அவனது ஏழாவது சகோதரனாக இணைந்து விட்டான். அத்துடன் 'இராவணன் தீமைச் செல்வம் அழிந்தது” என்றும் கூறுகிறான். இராமன் வீடணனை அழைத்து இலங்கையின் படை வலிமை பற்றியும் இதர அமைப்புகளைப் பற்றியும் விவரங்களைக் கேட்கிறான். “ஆர்கலி இலங்கையின் அரணும் அவ்வழி வார்கெழு கனைகழல் அரக்கன் வன்மையும் தார்கெழு தானையின் அளவும் தன்மையும் நீர்கெழுதன்மையாய் நிகழ்த்து வாய்” என்றான் வீடணனும் விரிவாக இலங்கையைப் பற்றி இராமனிடம் கூறினான். அரண், படைபலம், படைத்தலைவர்களின் பலம், அனைத்தையும் கூறி இராவணனுடைய பலத்தையும் பெருமையைப் பற்றியும் கூறுகிறான். “என்று உலப்புறச் சொல்லுகேன் இராவணன் என்னும் குன்று உலப்பினும் உலப்பிலாத் தோளினான் கொற்றம் இன்று உலப்பினும், நாளையோ உலப்பினும் சில நாள் சென்று உலப்பினும் நினைக்கு அன்றிப் பிறர்க்கு என்றும் தீரான்” 'இராவணனுடைய வெற்றிகளை விவரித்துச் சொல்லுதல் விரிவாகும். நாளெல்லாம் சொல்லலாம். அப்போதும் முழுவதும் சொல்லி மாளாது. உன்னைத் தவிர அவனை வேறு யாராலும் வெல்ல முடியாது” என்று வீடணன் கூறுகிறான்.