பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப்-பார்வை-அ. சீனிவாசன் 257 இராமனும் வானரப் படையும் சேது பாலம் கட்டிக் கடலைக் கடந்து இலங்கையின் கோட்டைச் சுவர்களுக்கருகில் வந்து விட்டனர். இராவணன் ஒற்றர்களை அனுப்பியிருந்தான். அவர்கள் வான வடிவம் கொண்டு வானரப்படைக்குள் புகுந்து இரகசியங்களை அறிந்து கொள்ள முயன்றனர். வீடணன் அவர்களை அடையாளம் கண்டு தனது மந்திர வலிமையால் அவர்களுடைய நிஜ உறிவிற்கு மாற்றி விட்டான். இராமன் அவர்களை அழைத்து, “இலங்கையின் ஆட்சிப் பொறுப்புச் செல்வத்தை வீடணனுக்குக் கொடுத்து விட்டோம் என்றும் கடலில் கற்களால் பாலம் கட்டி வானரப் படை கடலைக் கடந்து வந்து விட்டனர் என்றும், தாழ்விலாத் தவத்துத்தையலை சிறையில் வைத்தவர்களை நரகம் என்னும் மீளாச்சிறையில் வைப்போம் என்றும் உங்கள் தலைவனிடம் சொல்லுங்கள் என்றும் கூறி அவ்வொற்றர்களை அனுப்பி வைத்தான். அந்த ஒற்றர்களும் இராவணனிடம் திரும்பி வந்து, “தார் உலாம் மணி மார்ப! நின் தம்பியே தேர் உலாவு கதிரும் திருந்துதன் பேர் உலாவும் அளவினும் பெற்றனன் நீர் உலாவும் இலங்கை நெடுந்திரு” என்று எல்லா விவரங்களையும் தெரிவித்தனர். இராவணன் தனது கோட்டைச் சுவர் மீது நின்று வானரப் படையைப் பார்த்தான். அது யாரென இராமன் கேட்க வீடணன், “நாறு தன் குலக்கிளை எலாம் நரகத்து நடுவான் சேறு செய்தவன் உருப்பசி திலோத்தமை முதலாக் கூறு மங்கையர் குழாத்திடைக் கோபுரக் குன்றத்து ஏறி நின்றவன் புன் தொழில் இராவணன்” என்று கூறினான். இவ்வாறு வீடணன் தனது அண்ணனுடைய நிறை குறைகளையும், அத்துடன் அறநெறி தவறி புன் தொழில் செய்தவனாகவும் குலநாசம் செய்தவனாகவும் கூறுவதைக் காண்கிறோம்.