பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை - அ. சீனிவாசன் 259 பேதை பால கனதாகும் பிணிபசி மூப்பு துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கா மாநகருளானே.” என்று தொண்டரடிப் பொடி யாழ்வார் பிரான் அறிதுயிலில் கிடக்கும் அரங்கமாநகருளானை நோக்கி மன முருகிப் பாடுகிறார். உறங்கிக் கொண்டிருந்த அரங்கத் தம்மனைப் பள்ளியெழுந்தருளும் படி ஆழ்வார் பாடுகிறார். உறங்கிக் கொண்டிருந்த பாரதத்தைத் தட்டி எழுப்பப் பாரத மாதா திருப் பள்ளியெழுச்சி பாடுகிறார், மகாகவி பாரதியார். இவையெல்லாம் நமது நாட்டின் நடமாடிக் கொண்டிருக்கும் உண்மை உருவங்கள். அரங்கத்தம்மனின் உறக்கம் அறிதுயில். பாரதத்தின் உறக்கம் அறியாமைத்துயில். கும்பகருணனின் உறக்கம் ஒரு சாபக்கேடு. உறக்கம் எந்த வடிவத்திலிருந்தாலும் அது எழுப்பப் பட வேண்டியதேயாகும். குழந்தையைத் துங்க வைக்கத் தாலாட்டு, உறங்குபவனை எழுப்பப் பள்ளியெழுச்சி. எனவே கம்பனும் 'உறங்குகின்ற கும்பகன்ன, உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்றதின்று காண், எழுந்திராய் எழுந்திராய்”என்று பொருள் செறிவான நகைச்சுவையும் உள்ளடக்கிய அவலச் சுவைக்கவிதை வரிகளைக் கம்பன் மிக அழகாகப் பாடுகிறார். அருளின் ஆழியானது பாணம்பட்டு வாலி வீட்டுலகு எய்தினான். அதே போல விரைவில் இராமனின் அருள் கணை பட்டு விட்டுலகம் அடைய எழுந்திராய், எழுந்திராய் என்று கம்பன் கும்பகன்னனை எழுப்புகிறார் போலும், இன்னும் கும் பகன்னனை திருவிக்கிர மூர்த்தியின் வளர்ச்சிக்கு ஒப்பிட்டு மிக அழகாகக் கம்பன் கூறுகிறார். "விண்ணினை இடறும் மோலி விசும்பினை நிறைக்கும் மேனி கண்ணெனும் அவையிரண்டும் கடல்களின் பெரிய ஆகும், எண்ணினும் பெரியனான இலங்கையர் வேந்தன் பின்னோன்,