பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 260 மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான்” என்று உயர் நவிற்சியுடன் கம்பன் மிக அற்புதமாகப் பாடுகிறார். துக்கத்திலிருந்து எழுந்த கும்பகருணன் இராவணனிடம் செல்கிறான். இருவரும் நின்ற குன்று சென்ற குன்றைத் தழுவியதைப் போலத் தழுவிக் கொண்டனர். “வன் துணைப் பெருந்தம்பி வணங்கலும் தன் திரண்ட தோள் ஆரத் தழுவினன் நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும் சென்ற குன்றைத் தழிஇ அன்ன செய்கையான்” என்று கம்பன் கூறுகிறார். பின்னர், “உடனிருத்தி, உதிரத்தோடு ஒள் நறைக் குடன் நிரைத்து அவை ஊட்டித் தசை கொளி இக் கடல் நுரைத்துகில் சுற்றிக் கதிர் குழாம் புடை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான்” இராவணன் தனது பெரியதம்பி கும்ப கருணனைத் தன்னருகில் அமர வைத்து நல்ல இரத்தத்துடன் கூடிய நரை மிகுந்த புளித்த கள் குடங்களையும் கரிசோறும் உண்ண வைத்து கடல் நுரை போன்ற மெல்லிய ஆடைகளை உடுத்தி சிறந்த ஆயுதங்களுடன் கவசங்களும் அணிகலன்களும் பூட்டி அலங்கரித்தான். தன்னை ஏன் இவ்வாறு அலங்கரிக்கிறார்கள் என்று கேட்டான் கும்பகருணன். துக்கக் கலக்கத்தில் இன்னும் தெளிவு படாமல் இருந்தான் போலும். வானரப் படையினரும் மானுடரும் கோ நகரைச் சுற்றி நிற்கின்றனர். அவர்களைக் கொன்று ஒழித்து விட்டு வா என்று இராவணன் கூறுகிறான். கும்பகருணன் எப்போதும் தனது சுய உணர்வில் பேசும் போதும், பொது அறிவின் படியும் பட்டறிவின் படியும் பேசும் போதும் சிறந்த