பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 268 துறப்பது துணியார் தங்கள் ஆருயிர் துறந்த போதும் இறப்பு எனும் பயத்தை விட்டாய் இராமன் என் பானைப் பற்றிப் பிறப்பு எனும் புன்மை தீர்ந்தாய் நினைந்து என் கொல் பெயர்ந்த வண்ணம்” என்று மனம் வருந்திக் கேட்கிறான். அறத்தின் பால் நிற்பவர்கள் இராம இலக்குவர்கள். அவர்கள் உனக்குத் துணைவர்களாக நின்று அபயம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாகத் தங்கள் உயிர் போனாலும் உன்னைக் கைவிட மாட்டார்கள். நீ இராமனைப் பற்றி நிற்பதால் இறப்பு என்னும் பயத்தை விட்டாய். பிறப்பு என்னும் புன்மை தீர்ந்தாய். நீ என்ன நினைத்துக் கொண்டு மீண்டும் இங்கு வந்திருக்கிறாய் என்று கேட்டான். இன்னும், அறம் என்று உறுதி பட நிற்கும் நல்லோருக்கு அடிமை பெற்று அவர் மூலம் திரிபு, ஐயம், அறியாமை ஆகிய மூன்று பாவங்களையும் அடியோடு ஒழித்து, நானே வலுவானவன் என்று அகங்காரம் கொண்ட தீமையை இந்தப் பிறவியிலேயே நீக்கிவிட்ட நீ, பிறர் மனை நோக்கும் எங்களை உறவு என்று ஏன் கொள்ள வந்தாய் என்று கேட்டான். அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று (அவன் தனாலே ம்றம் என நின்ற மூன்றும் மருங்கு அற (மாற்றி மற்றும், திறம் என நின்ற திமை இம்மையே தீர்ந்த செல்வ பிறர் மனை நோக்கு வேமை உறவு எனப் (பெறுதி போலாம். ” என்பது கம்பனுடைய சிறப்பான கவிதையாகும். இங்கு கும்பகருணன் வாய் மொழியாகக் கம்பன் ஒரு அருமையான தத்துவ ஞானக் கருத்தை முன் வைத்துள்ளார். திரிபு