பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் յՋ(5 சமுதாயப்-பார்வை- சினிவாசன் 269 ஐயம் அறியாமை ஆகிய மூன்றும் பாவங்களாகும். பகவத் கீதையும் இதை எடுத்துக் கூறுகிறது. இவை மயக்கத்தால் ஏற்படுபவை. இத்தகைய பாவங்களை அறிவுத் தெளிவால் அறத்தின் வழியாய்ப் போக்க முடியும். இராமன் அறன் வழியிலானவன். அவனடி சேர்ந்து அவன் மூலம் இந்த மூன்று பாவங்களையும் வீடணன் தன்னிட மிருந்து நீக்கி ஒழித்து விட்டான் என்று கும்பகருணன் எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். அடுத்து, திறம் என நின்ற தீமை தீர்ந்தவன் என்று வீடணனைக் குறிப்பிடுகிறான். வலிமையுள்ளது என்று நிற்கும் தீமை எனக் கூறப்பட்டிருக்கிறது. வலிமையென்பது அறத்தின் பால் நிற்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த வலிமையே தீமையாகி விடும். தான் வலிமையுள்ளவன், எதையும் செய்யலாம் என்று தன்னகங்காரம் கொண்டு எவனும் கருதினால் அந்த வலிமையே தீமையாகி விடும். இதை இராவணன் பால் காண்கிறான் கும்பகருணன். எனவே அறத்தின் பால் நிற்கும் வீடணன் திறம் என நின்ற தீமை தீர்ந்தவன். நான் நீ என்று சவால் விட்டு தன்னகங்காரம் கொண்டு மோதுவது திறம் என நிற்கும் தீமையின் பாற் பட்டதாகும். வீடணன் அத்தகைய தீமையிலிருந்து விலகியவன். அவன் பிறர் மனை நோக்கும் பாவத்தின் பக்கம் எப்படி உறவு கொள்ள முடியும். எனவே என் பக்கம் ஏன் வந்தாய் என்று தன் தம்பியைக் கும்பகருணன் கேட்கிறான். "நீதியும் தருமமும் நின்ற நிலைமையும் புலமை தானும் ஆதி அம் கடவுளாலே அருந்தவம் ஆற்றிப் பெற்றாய், வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயுட் பெற்றாய் சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய்”! “நீ அருந்தவங்கள் செய்து ஆதியான கடவுள் மூலமாக நீதியும் தருமத்தில் நிலைத்து நிற்கும் தன்மையும் தெளிவான அறிவும் பெற்றிருக்கிறாய். பிரம்ம தேவன் அருளால் நீண்ட ஆயுளையும் பெற்றிருக்கிறாய். இருந்தாலும், நீ பிறந்த சாதியின் இழிவிலிருந்து இன்னும் நீங்கவில்லை போலும்” என்று கும்பகருணன் கூறுகிறான்.