பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமபக.-துரு-சமுதாயப_பாவை-அ. சினிவாசன் 2 W I வந்தேன்”என்று கூறி அவனிடம் தனது வேண்டுகோளை விடுத்தான். ‘அண்ணா நீயும் இராமன் பக்கம் வந்து விட்டால் உனக்கும் அவன் அருள் கூர்வான். அபயம் அளிப்பான், உனக்கும் அது பிறவி நோய்க்கு மருந்தாகும். இந்தத் தொல்லை நிறைந்த வாழ்க்கை நீங்கி விடு பெறுவாய். எனக்கு அவன் கொடுத்துள்ள செல்வத்தையும் இலங்கை அரசையும் நான் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். உன் ஏவலின் படி நான் நடந்து உனக்குது சேவை செய்கிறேன். எனது மனதில் உள்ள துன்பத்தை நீ நீக்குவாயாக’ என்று விடணன் மிகவும் உருக்கமாகக் கும்பகருணனிடம் கூறுகிறான். "இருள் உறு சிந்தை யேற்கும் இன் அருள் சுரந்த வீரன் அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும்; அன்றி மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும் உருள் உறுச கட வாழ்க்கை ஒழித்து; வீடு அளிக்கும் அன்றே” என்றும், “எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கை அரசும் எல்லாம் நினக்கு நான் தருவன், தந்து உன் ஏவலின் நெடிது நிற்பேன் உனக்கு இதின் உறுதியில்லை, உத்தம உன் பின் வந்தேன் மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு, வாழி' என்றும் வீடணன் தன் முன்னோனான கும்பகருணனிடம் கூறுவதைக் கம்பன் மிக அழகாக உருக்கமாக உணர்ச்சி பூர்வமாகத் தனது கவிதைகளில் விளக்குகிறார்.