பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<stast_~QQ சமுதாயப்-பார்வை-அ.-சினிவாசன் 273 ஆதலால் அவனைக் காண, அறத் தொடும் திறம் பாது ஐய போதுவாய் நீயே! என்னப் பொன் அடி இரண் டும் பூண்டான்” என்று கூறி இராமனிடம் வந்து சேரும் படி அந்த இராமன் பேராலும் வணங்கி வேண்டிக் கேட்டுக் கொள்கிறான். கும்ப கருணனும் வீடணன் கூறிய நியாயங்களை மறுக்கவில்லை. வேத நாயகனான இராமன் மீதான பக்தியையும் மறுக்கவில்லை. வீடணன் மீதுள்ள சகோதர அன்பையும் பாசத்தையும் பரிவையும் இரக்கத்தையும் நல்லெண்ணத்தையும் தர்ம நியாயத்தையும் குறைத்துக் கொள்ளவில்லை. ஒரு பக்கம் வீடணனை இராமன் பக்கமே இருக்கும் படி வேண்டுகிறான். அதே சமயத்தில் மறுபக்கம் தான் இராவணனுக்காக உயிரை விடுவது தனது கடமையெனக் கருதுகிறான். “நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிதுநாள் வளர்த்துப்; பின்னைப் போர்க்கோலம்செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன் தார்க் கோல மேனிமைந்த! தன் துயர் தவிர்த்தி யாயின் கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின்; ஏகி இந்த நீர் மேலெழுத்துப் போன்ற நிலையில்லா வாழ்வை விரும்பி, என்னை இத்தனை நீண்ட நாட்கள் வளர்த்துப் பின்னர் இப்போது போர்க்கோலம் செய்து விட்ட அண்ணனுக்காகப் போர்க் களத்தில் போரிட்டு உயிர் கொடுக்காமல் நான் அங்கு இராமன் பக்கம் போக மாட்டேன். எனது துயர்களைத் தவிர்க்க நீ போய் அந்த நீல மேகமேனியானுடன் சேர்ந்து கொள்வாயாக. அதிவிரைவில் அவனிடம் போய்ச் சேர்வாயாக என்று கும்பகருணன் கூறுகிறான். மேலும் கும்பகருணன் தொடர்ந்து வீடணனிடம் பேசுகிறான் "மலரின் மேல் இருந்த வள்ளல் வழுவிலா வரத் தினால் நீ