பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 276 நான் சொல்வது உனக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கது என்று நீ கருதினால் அதைச் செய், நீ அவர்களுடைய நட்பை விரும்பி அவர்களுடனேயே செல்வாயாக அதற்கு மேல் நானும் வர வேண்டும் என்று ஒரு மாற்றத்தை நீ விரும்பினால் அதனால் நன்மை விளையும் என்று கருதாதே. வணக்கத்திற்குரியவனாகவே நீ இருப்பாய் என்று கும்பகருணன் மிக நுட்பமாகத் தனது கருத்தை முன் வைத்தான். கும்பகருணனுக்குத் தனது இரு சகோதரர்கள் பாலும் அன்பும் பாசமும் அதிகமான மதிப்பும் மரியாதையும் உண்டு. அவன் போரின் விளைவுகளைப் பற்றி நன்கு ஊகித்து அறிந்திருந்தான். எனவே வீடணனை இராமன் பக்கமே இருக்கச் சொன்னான். அறிவு கூர்மையுடன் தான் அவன் தனது கருத்துக்களை வெளியிட்டிருக்கிறான். கும்பகருணனுடைய நிலையில் ஒரு தொடர்ச்சியான உறுதிப்பாடு இருப்பது தெரிகிறது. “போதி நீ ஐய! பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற வேதியர் தேவர் தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை, ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி மாதுயர் நரகம் நண்ணா வண்ணமும் காத்தி ! மன்னோ” ஐய, நீ போகலாம், வேதியர் தேவன் தன்னை வேண்டி, அவன் உத்தரவைப் பெற்று மெய்யான ஆதி நூல்களான வேதங்களின் வழியில் செய்ய வேண்டிய கடன்களை ஆற்றி, யாருக்கும் நரகம் நல்காவண்ணம் காப்பாயாக’ என்று தான் செய்ய வேண்டிய பிதுர்க் கடன்களைச் செய்யும் படி கூறுகிறான். இறுதியாக, “ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்திப் போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம் சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்”