பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

******7 г5205 °Cратили штета — =e. சினிவாசன் 277 நடக்க வேண்டிய காலத்தில் நடப்பது நடந்தே தீரும். அழிவது அழிந்தே தீரும். நீ வெளியே நின்று போற்றினாலும் நடப்பதைத் தடுக்க முடியாது. உனக்கு இது தெளிவாகத் தெரிந்த விஷயம்தான். உன்னைக் காட்டிலும் இதில் தெளிந்தோர் இங்கு யார் இருக்கிறார்கள்? நீ வருத்த மடைய வேண்டாம், நீ போகலாம், எனக்காக நீ எந்தக் கவலையும் பட வேண்டாம், இரக்கப் படவும் வேண்டாம், என்று கூறி கும்பகருணன் வீடணனைத் தழுவிக் கொண்டான். வீடணன் தமையனை வணங்கி விடைபெற்றுக் கொண்டான். அரக்கர் படைகளும் வீடணனை வணங்கின. அவனும் இராமனிடம் திரும்பினான். “எய்திய நிருதர் கோனும் இராமனை இறைஞ்சி எந்தாய் ! உய்திறன் உடையார்க்கன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் பெய்திறன் எல்லாம் பெய்து பேசினென்; பெயரும் தன்மை செய்திலன்; குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும்; என்றான்.” எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், அவன் அசையவில்லை. குலத்து மானத்தைஅவன் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. அவனிடம் அறன் வழியில் ஒழுகும் உள்ளம் இல்லை என்று இராமனிடம் வீடணன் கூறினான். கும்பகருணன் மீது வீடணனுக்குள்ள சகோதர பாசத்தையும் அன்பையும் பரிவையும் உயர் மதிப்பையும் இராமன் நன்கு அறிவான் எனவேதான் இராமன், “கொய்திறச் சடையன் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் நொய்தினில் துளக்கி, ஐய! நின் எதிர் நும் முன்னோனை, எய்துறத்துணித்து வீழ்த்தல் இனிது அன்றென்று இனைய சொன்னேன்,