பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 278 செய்திறன் இனி வேறுண்டோ? விதியை யார் தீர்க்க கிற்பார்”? என்று வீடணனிடம் கூறினான். இங்கு இராமன் கூறுவது தர்மத்தின் பாலும் மனிதாபி மானத்தின் பாலும் நிற்கும் சிறந்த வார்த்தைகளாகும். அரசியல் வார்த்தைகளில் சொல்வதானால் சிறந்த அரச நீதிக் கருத்துக்களாகும். சமுதாயக் கருத்தில் சொல்வதானால் அது விதியின் வழியாகும். இராமன் வீடணனிடத்தில் “உன் கண் முன்பாகவே உனது சகோதரனைக் கொல்வது இனிதல்ல என்பதற்காக, உன்னை அவனிடத்தில் நேரில் சென்று பேசச் சொன்னேன், இனி நாம் என்ன செய்ய முடியும் விதியின் வலியை யார் தடுக்க முடியும்” என்று கூறினான். இராமாயணப் பெருங்கதையின் யுத்த காண்டத்தில் போர்க்கள பூமியில் வீடணனும் கும்பகருணனும் சந்திப்பது ஒரு முக்கியமான காட்சியாகும். பல முக்கியமான நெருடலான கருத்துக்களும் தத்துவங்களும் நடை முறை செயல்பாட்டு அனுபவக் கருத்துக்களும் விவாதிக்கப் பட்டுக் கடைசியில் விதியின் வழிக்கு விடப்படுகிறது. நடப்பது நடக்கட்டும் என்று நிகழ்ச்சிகளைத் தன்போக்கில் செல்ல விடப்படுகின்றன. வீடணன் கும்பகருணன், சுக்கிரீவன், இராமன் ஆகியோரின் பண்பட்ட நிலையின் வளர்ச்சிப் போக்குகளை வளர்ச்சி மட்டத்தின் அளவுகளை சமுதாய அறிவு நிலையின் சிந்தனைப் போக்குகளைக் காண முடிகிறது. போரின் முடிவுகளில் எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவ நிலை கும்பகருணனுக்கும் விடணனுக்கும் ஏற்படுகிறது. அவர்களின் சகோதர பாசம் குறுக்கே நிற்கவில்லை. கும்பகருணன் மிகுந்த வீரத்துடன் ந்தான். வானரப் படையின் தலைவர்களை எதிர்த் க்கிரமாக போரிட்டு அவர்களை சோர்வடையச் செய்தான், அங் எதிர்த்து வெற்றி கொண்டான். மாருதியை gItಚ್ಡ[೨೧೬೬. மாருதியும் சோர்வடைந்தான். இலக்குவன் கும்.பி.கருணனை எதிர்த்தான், அவனாலும் கும்பகருணனை வெல்ல முடியவில்லை. சுக்கிரீவன் எதிர்த்தான்,