பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 280 ஆதியாய் உனை யடைந்தான் அரசர் உருக் கொண்டு அமைந்த வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன்.” ’ ‘வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரோடும் கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறு வுடையான் ஒல்லுமாறு இயலு மேல் உடன் பிறப்பின் பயன் ஒரான் கொல்லுமால் அவன் இவனைக் குறிக் கோடி கோடாதாய்” என் தம்பி வீடணன் நீதியால் வந்த தரும நெறி அறிந்தவன். சாதியால் வந்த சிறு நெறி அறியாதவன். “இவன் தன்னை வேரோடு களைய முயல்கிறான்” என்று இவன் மீது இராவணன் கறுக் கொண்டிருக்கிறான். அவனைத் தன் உடன் பிறப்பாகக் கருதவில்லை. உடன் பிறந்தே கொல்லும் வியாதியாகக் கருதுகிறான். அவனை எப்படியும் கொல்ல வேண்டும் என்று வம்பம் கூறிக் கொண்டிருக்கிறான். அதை நீ குறிப்பாகக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். “தம்பியென நினைந்து இரங்கித் தவிரான் அத்தகவு இல்லான் நம்பி இவன் தனைக் காணின் கொல்லும் இறை நல்கானால் உம்பியைத்ததான்,உன்னைத்தான் அனுமனை த்தான் ஒரு பொழுதும் எம்பி பிரியானாக அருளுதி! யான் வேண்டினேன்.” 'இராவணன், வீடணனைத் தனது தம்பி என்று நினைந்து இரக்கம் கொள்ளமாட்டான். அவனைக் கண்டால் எப்படியும் கொன்று விடுவான். அதனால் அவன் உன்னையும் உன் தம்பி இலக்குவனையும், அனுமனையும் ஒரு பொழுதும் பிரியாதிருக்க வேண்டும். எப்படியும் என் தம்பி வீடணனைக் காப்பாற்ற வேண்டும்”