பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன-ஒரு சமுதாயப் பார்வை- அ. சீனிவாசன் 28] என்று வேண்டிக் கொண்டு, “எனது மூக்கும் முகமும் சிதைந்து விட்டன. கைகால்கள் போய் விட்டன. உனது கணையால் எனது கழுத்தை நீக்கி எனது தலையை யாரும் காண முடியாத படி கருங்கடலின் அடியாழத்தில் கொண்டு போய் அழுத்திவிடு.” என்றும் வரம் கேட்டுக் கொண்டான். இராமனும் அவன் கேட்ட வரத்தை மறுக்காமல் அவ்வாறே செய்து முடித்தான் இங்கு கும்பகருணன் வீடணன் மிது கொண்டிருந்த அளவில்லாத அன்பையும் பாசத்தையும் காண்கிறோம். அத்துடன் வீடணன் பால் இராவணனுக்குள்ள மனநிலையையும் கும்பகருணன் வெளிப்படுத்திக் காட்டுவதையும் காண்கிறோம். போர்க்களத்தில் கும்பகருணன் மாண்ட செய்தியைத் துதர்கள் வந்து இராவணனிடம் கூறினார்கள். இராவணன் மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைந்தான். அப்போது அவனுடைய சகோதர பாசம் பொங்கி வெளிப்படுகிறது. “பிரிவு என்னும் பிழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும் உறுவதொன்று இன்றி ஆவி ஒன்றென நினைந்து நின்றான் எறிவரும் அமரில் தம்பி தன் பொருட்டு இறந்தான் என்ன அறிவழிந்து அவசனாகி அரற்றினன் அண்டம் முற்ற” “வல்நெஞ்சின் என்னை நீ, நீத்துப் போய் வான் அடைந்தால் இன்னம் சிலரோடு ஒரு வயிற்றில் யார் பிறப்பார்? மின் அஞ்சு வேலோய் விழிய்ஞ்சி வாழ்கின்றார் தம் நெஞ்சம் தாமே தடவாரோ வானவர்கள் “எனது அருமைத் தம்பி என் பொருட்டாக உயிர் விட்டான். இப்படிப் பட்ட தம்பி போல யார் ஒரு வயிற்றில் பிறப்பார்கள்” என்று