பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 282 அரற்றி தன் தம்பியை நினைந்து உருகி இக்கணத்தில் மானிடவர் ஈரக்குறுதியால் எம்பிக்கு முக்கப்புனல் உகப்பேன்’ என்று ஆவேசமாகக் கூறுயதைக் கம்பன் மிகச் சிறப்பாகத் தன் கவிதைகளில் குறிப்பிடுகிறார். இராவணனுடைய மகன் அதிகாயன் போர்க்களத்தில் கொல்லப் பட்டான். அதைக் கேட்டு அதிகாயனுடைய தாய் தானமாலை புலம்பி அழுகிறாள். சீதையால் இன்னும் எத்தனை நடக்குமோ என்று அலறி அழுது கொண்டு இராவணனைப் பற்றி, “உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய் நம்பி குலக்கிழவன் கூறும் நலம் ஒராய் கும்பகருணனையும் கொல்வித்து என் கோமகனை அம்புக்கு இரையாக்கி ஆண்டாய் அரசு ஐய”! என்று கூறிப் புலம்புகிறாள். அதில் அறிவுடைய தம்பி என்று வீடணனையும் கும்பகருணனையும் குறிப்பிடுகிறாள். இதைக் கம்பன் மிக நயமாகக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். இந்திரசித்தன் நிகும்பலையாகம் செய்வதை இலக்குவனும் வீடணனும் அனுமனும் மற்றவர்களும் சென்று தடுத்தனர். இந்திரசித்தன் தனது ஆற்றல் அனைத்தையும் காட்டி மிகக் கடுமையாக வீரத்துடன் தீரத்துடன் போரிட்டான். ஆயினும் அவன் வெற்றி பெறவில்லை. தனது தோல்விக்கு வீடணன் தான் காரணம் என்று கருதிய இந்திரசித்தன் வீடணனை இகழ்ச்சியாகப் பலவாறாகப் பேசினான். 'நீ மாற்றானுக்கு அடி தொழுது செல்கிறாய், உனக்கு மானம், ஈனம், இல்லை, ஒரு வேளை இராவணன் இராமனுடைய அம்பால் அடிபட்டுப் புழுதி பாயப் புரண்ட நாளில் நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டுப் பேசுகிறான். “புரண்டு மேல் வீழ்ந்து அழுதியோ? நீயும் கூட ஆர்த்தியோ? அவனை வாழ்த்தித் தொழுதியோ, யாதோ செய்யத் துணிந்தனை” என்று கடுமையாகப் பேசினான்.