பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 288 பார் மகளைத் தழுவினை யோ! திசையானை மறுப்பு இறுத்த பணைத்த மார்பால்” இவ்வாறு வீடணன் கண் கலங்கி அண்ணன் உடல் மீது விழுந்து அலறி அழுதான். பின்னர் அவன் இராவணனுக்கும் மற்றும் இறந்து பட்ட இராக்கதர் அனைவருக்கும் ஈமக்கடன்கள் செய்து முடித்தான். "வருந்தல், நீதி மனுநெறி யாவையும் பொருந்து கேள்விப் புலமையினோய்’ என்று வீடணனுக்கு இராமன் ஆறுதல் கூறினான். பின்னர் இராமன் ஆணைப்படி இலக்குவன் ஆதி நாயகன் ஆக்கியநூல் முறைப்படி வீடணனுக்கு இலங்கையின் ஆட்சிப் பட்டத்தைச் சூட்டினான். இவ்வாறு இராவணன் இறந்த பின் வீடணன் இலங்கையின் அரசனாகிறான். இலங்கை சகோதரர்களின் கதை ஒரு வாறு முடிகிறது. அதிலிருந்து ஏராளமான படிப்பினைகளையும் நுட்பமான மன உணர்வு நிலைக் கருத்துக்களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இலக்கியச் சுவைகளையும் கவிதை நயங்களையும் காண முடிகிறது. கம்பன் தமிழை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றிருப்பதைக் காண முடிகிறது. கம்பீரம், பேராண்மை, உறக்கம், உயர்ந்த அறிவு, செஞ்சோற்றுக் கடன், அறிவு, சீலம் அறநெறி முதலிய அருங்குணங்கள் நிறைந்த சகோதர பாசம், அன்பு, பரிவு, நிறைந்த சகோதர உணர்வு, உறவு, மற்றும் “அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” என்னும் வள்ளுவர் வாசகத்தின் படியான சகோதரச் சார்பு நிலை, ஆகியவற்றின் அத்தியாயம் நிறைவு பெறுகிறது. மீண்டும் இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன், குகன், சுக்கிரீவன், வீடணன் ஆகிய ஏழு சகோதர்களும் ஒன்று சேர்ந்து அயோத்தியில் ஒன்று கூடி, இராமனுக்கு முடி சூட்டு விழா நடந்து முடிகிறது. பாரத நாட்டின் ஒற்றுமையும் நல்லாட்சியும் நிறுவப் படுகிறது. பாரதப் பண்பாட்டின் சகோரத்வம் நிலை பெறுகிறது. கம்பன் காட்டும் சகோதரத்வம் பாரதத்தின் ஆறுகளையும் மலைகளையும் கடலையும் தாண்டியும் இணைத்தும் இமயம் முதல்