பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கம்பநாடரும் இராமாவதாரக் காவியமும்' 18 கம்பனது மகாகாவியம் அவர் காலத்திய தமிழகத்தின் நாகரிக வளர்ச்சியைத் தாங்கி நிற்கிறது. எனவே கம்பனது இராமாயணம் கம்பனைக் காலத்தால் அறிவதற்கு அனுகூலமாக அமைந்திருக்கிறது. அதன் மூலம் அக்காலத்திய மக்களின், மக்கள் சமுதாயத்தின் வளர்ச்சியின் கட்டத்தை அறிய முடிகிறது. இராம காவியத்தில் அயோத்தியும், கிட்கிந்தையும், இலங்கையும் வேறு பட்ட வளர்ச்சிக் கட்டங்களின் சமுதாய மையங்களாகும். அவைகளைப் பற்றிக் கம்பனது கவி வண்ணம் மிகவும் நேர்த்தியாக மெருகு படுத்திக் காட்டுகிறது. கம்பன் தனது காவியம் முழுவதிலும் காவிரியின் சிறப்பையும், தமிழ் மொழியின் சிறப்புத் தன்மையையும் எடுத்துக் காட்டுகிறார். தான் நேரடியாக அறிந்த சோழவள நாட்டின் சிறப்புகளைக் கருத்தில் கொண்டுக் கோசல நாட்டை விவரித்துப் பாடுகிறார். கம்பன் தனது இராமனை வடமொழி தென்மொழி ஆகிய இரு மொழிகளையும் நன்கு அறிந்தவனாகக் காட்டுகிறார். “தன் சொற்கள் தந்தாண்டு எனை நாளும் வளர்த்த தாதை தன் சொல் கடந்து எற்கு அரசாள்வது தக்க தன்றால் என்சொல் கடந்தால் உனக்கு யாதுளது ஈனம் என்றான் தென்சொல் கடந்தான், வடசொற் கலைக்கு எல்லை தேர்ந்தான்” என்பது கம்பனது கவிதை. கவிஞன் தனக்கு தமிழ் மீதுள்ள அளவற்ற பற்றுதல் காரணமாகத் தனது நாயகனையும் தென் சொல் கடந்தவனாகக் காட்டுவது தனிச் சிறப்பு கொண்டதாகும். கம்பனது பொதுவான கடவுட் கொள்கை, சமயக் கொள்கை, சமய சமரசக் கொள்கை, சமுதாயக் கொள்கைகள் பற்றியும் மற்றும் மானிடத்தின் சிறப்பு பற்றியும், சகோதரத்துவம் பற்றியும் அரசியல்