பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

suus” - SPG supsmuu umiswa ==2, efówfoun) 29.4 பெறுகிறான். இதில் சுக்கிரீவன் தனக்கு ஆட்சி அதிகாரம் வேண்டுமென்று போட்டி போட்டவனல்ல. அண்ணனுடைய அதிகாரத்தை மறுத்தவனோ அல்லது எதிர்த்தவனோ அல்ல. ஆனாலும் அண்ணன் கொல்லப் படுவதற்கு சுக்கிரீவனே காரணமாக இருந்து நிகழ்ச்சிகளின் போக்கில் அரசியல் அணி சேர்க்கையின் காரணமாக அதாவது முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக, ன்து தம்பிக்கு அரசை விட்டுக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்த 'அந்த இராமனே கிட்கிந்தையில் மூத்தவனைக் கொன்று, இளையவனுக்குப் பட்டம் சூட்டுகிறான். அங்கு ஏற்பட்ட அரசியல் மற்றும் அறநெறிப் பிரச்சனைகளையும் கதைப் போக்கில் காணலாம். இலங்கையில் மூத்தவனாகவும், அரசனாகவும் இருந்த இராவணனும் அவனுக்கு அடுத்த தம்பியான கும்பகருணனும் கொல்லப் பட்டு, மூவரில் இளைவனான வீடணனுக்கு அரசுப் பட்டம் கொடுக்கப் பட்டது. இங்கும் இளையவன் வீடணன் அரசுப் பட்டத்தை விரும்பியவனல்ல. தனது அண்ணனுடைய ஆட்சி அதிகாரத்தை மறுத்தவனுமல்ல. அண்ணனுக்கு எதிராகப் போட்டி போட்டவனுமல்ல. ஆனால் இங்கு முழுக்க முழுக்க அறநெறியின் பாற்பட்ட பிரச்சனையே எழுகிறது. இதில் இராவணன் அறநெறி தவறி விட்டான். வீடணன் அறநெறியின் பால் உறுதியாக நின்றான் அறத்தைக் காக்கவும் அறத்தை நிலை நாட்டவும் அவதாரம் எடுத்த றுநீராமன் இலங்கை அரசியலில் இராவணனையும் கும்பகருணனையும் வென்று, வீடணனுக்கு அரசைக் கொடுக்க வேண்டிய தேற்பட்டது. இலங்கையில் விரிவான போர் நடை பெறுகிறது. அங்கு போர்க்கால அரசியலும் ஆலோசனைகளும் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் நிகழுகின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் கதைப் போக்கில் விரிவாகக் காண்கிறோம். இறுதியாகப் போரில் இராமன் வெற்றி பெற்று அறிநெறி தவறிய இராவண அரக்கனை வீழ்த்தி விட்டு, வீடணனை அரசனாக்கி அறத்தை நிலை நாட்டுகிறான். இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் சாதாரண அரசியல் அதிகாரப் பிரச்சனைகளைக் காட்டிலும் "அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்னும் மகத்தான் யுகக்கருத்தே மய்யமான கருத்தாகப் பேசப்பட்டு நிலை நாட்டப்படுகிறது. ஆயினும் அத்துடன் மனித குல