பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. <»lhugyth <!>Vr&lugylli 295 வாழ்க்கைக்குப் பொதுவாகத் தேவைப்படும் அரச நீதியாக அரசியல் பின்னல்கள், சூழ்ச்சிகள், அணி சேர்க்கைகள், போர்த்தந்திரங்கள், வியூகங்கள், உபாயங்கள், அறநெறிகள், வாழ்க்கை நெறி முறைகள், அரசியல் நெறிமுறைகள் முதலிய பல அரசியல் கருத்துக்களும் விவாதிக்கப் படுகின்றன, பேசப் படுகின்றன. இராமாயணத்தில் வசிட்டன், இராமன், கோசலை, பரதன், வாலி, தாரை, இலக்குவன், கும்பகருணன், வீடணன், மாலியவான், அனுமன் மற்றும் பல தெய்வீகப் பாத்திரங்கள் மூலமாகவும், கம்பன் நேரடியாகக் கவி வாக்காகவும், பல அரசியல் தனி நெறிகளையும் பொது நெறிகளையும், நமது நாட்டின் வாழையடி வாழையாக வந்த சாத்திரங்கள் மூலமாக வந்துள்ள மக்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளையும் விரிவாக எடுத்துக் கூறுகிறார். அரசியல் என்பது வெறும் ஆட்சி அதிகாரம் பற்றிய பிரச்சனைகளும் விதி முறைகளும் மட்டுமல்ல. மனித சமுதாயத்தை நெறிப்படுத்தி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான சிறந்த அறிவியல் சாத்திரமாகும். அதை இராம காதையில் பல இடங்களிலும் சிறப்பாகக் காண்கிறோம். அதை ஒவ்வொரு களத்திலும் காட்சியிலும் நாம் காண முடிகிறது, சந்திக்க முடிகிறது, es இராம ராஜ்ஜியம் என்பது நமது நாட்டில் மிகப் பலமான முக்கியமான முதன்மையான கருத்து வடிவமாகும். மக்கள் மனதில் ஆழ வேரூன்றி இடம் பெற்றிருக்கும் கருத்து வடிவமாகும். நீதியான, நேர்மையான, வெளிப்படையான, அற வழியில் சிறிதும் பிறளாத, மக்களைக் காக்கும் ஒரு ஆட்சியை நமது நாட்டு மக்கள் இராம ராஜ்யம் என்று குறிப்பிடுகிறார்கள். _ __-T இராமாயணத்தில் உத்தர காண்டத்தில் இராமனுடைய ஆட்சி நடை பெறுகிறது. ஆனால் கம்பராமாயணத்தில் உத்தர காண்டம் இல்லை. பால காண்டத்தில் தசரதனுடைய ஆட்சியைப் பற்றி நாட்டுப் படலத்திலும் நகரப் படலத்திலும் கம்பன் மிகச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். அதில் மிகவும் சிறந்த நுட்பமான எக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் கம்பனுடைய மிகச் சிறந்த சிந்தனைகளை நாம் பெருமைப் படத் தக்கக் கருத்துக்களைக் காண்கிறோம்.