பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்_ஒரு_சமுதாயப்-பார்வை-அ-சீனிவாசன் 296 இராம ராஜ்யம் என்பது நேரடியாக இராமனுடைய ஆட்சியில் நிகழ்ந்ததாகக் கம்ப இராமாயணத்தில் இல்லா விட்டாலும், இராமனுடைய மகத்தான லட்சியப் பயணத்தில், அவன் சந்தித்தவர்கள், அவர்களுடன் அவன் நடத்திய உரையாடல்கள், ஒவ்வொரு பிரச்சனையிலும் நிகழ்ச்சியிலும் அவன் நடந்து கொண்ட நேர்மையான முறைகள், அவன் அறத்தைக் காக்கவும் அறத்தை நிலை நாட்டவும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதில் அடைந்த சாதித்த வெற்றிகள், முதலியவைகளெல்லாம் இராம ராஜ்யத்திற்கு தீரியட/உதாரணங்களாகும். இராமனுடைய :: மகிமை, சிறந்த மனித நிலை சகோதரத்வ நிலை, சிறந்த சுத்த வீர நிலை பயிற்சியும் பாண்டித்யமும் பெற்றுள்ள வித்தை,கல்வி, ஞானம் முதிர்ந்த நிலை அரச நிலை, முதலியன அனைத்தும் இராம ராஜ்யத்தின் சின்னங்களாகும். அயோத்தியின் அரசியல் அயோத்தியின் அரசன் தசரதன். மன்னராட்சி முறையில் எல்லா அதிகாரங்களும் அரசனுக்கு இருந்தன. மன்னனுடைய ஆட்சி அதிகாரத்தின் சின்னமாகக் கோலும் குடையும் இருந்தன. கோல் என்பது நல்ல அரசர்கள் கையில் செங்கோலாகவும், அறவழியில் செல்லாத அரசர்கள் கையில் கொடுங்கோலாகவும் இருந்தன. செங்கோல் மன்னர்கள் புகழடைந்தார்கள். அவர்களின் புகழைப் பற்றி ‘மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி போன தண் குடை வேந்தர் புகா என” கம்பன் குறிப்பிடுகிறார். மன்னராட்சி முறையில்தான் அரசு என்னும் நிர்வாக எந்திரம் தோன்றிப் படிப்படியாக வளர்ச்சி பெற்று விரி வடைந்தது. இன்று அந்த நிர்வாக எந்திரம் மிகவும் விரிவு பட்டதாக வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அரசுக்குரியவன் அரசன் என்று அழைக்கப் பட்டான். மன்னராட்சி முறையில் மன்னன் அரசனாக இருக்கிறான். மக்களாட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். அந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு நல்ல பயிற்சி கொடுத்து அவர்களைத் தக்கவர்களாக்குவது அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் கடமையாக இருக்கிறது. மன்னனுடைய முக்கிய பணி நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதாகும். அதனால் தான் மன்னனுக்குக் காவலன் என்று