பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமபன்-ஒரு_சமுதாயப்-பார்வை-அ.-சீனிவாசன் 298 எனவே மன்னர்கள் கட்டுக் கடங்காதவர்களாக இருக்கக் கூடாது. நீதிநெறி முறைகளுக்குட் பட்டவர்களாக இருக்க வேண்டும். போர்கள் கூடாது. போர்களைத் தவிர்க்க முயல வேண்டும். அதிலும் குறிப்பாக ஆக்கிரமிப்புப் போர்கள் கூடவே கூடாது. அவை கண்டிக்கப் பட வேண்டும். தடுக்கப் பட வேண்டும். பொதுவாக அரசுக்கு, அரசனுக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறக் கூடிய, தட்டிக் கேட்டுச் சுட்டிக் காட்டக் கூடிய துணிவும் திறனும் அறிவும் நிறைந்த அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்று பல அறிஞர்களும் நல்ல சிந்தனையாளர்களும் பல நல்ல கருத்துக்களைக் கூறி அவைகளை மக்களுடைய உள்ளங்களில் வேர் ஊன்றச் செய்தார்கள். வரிக் கொடுமைகளும் போர்க் கொடுமைகளும் நீங்க வேண்டும் என்பதைக் கம்பன் "இறை தவிர்ந்திடுக”, “படை ஒழிந்திடுக” என்று அதாவது வரிகள் நீங்குக, போர்கள் ஒழிக. என்று தனது கவிதை வரிகளில் மிக வலுவாக அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். “இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஒர் ஏழ் நிதி நிறை தரு சாலை தாழ் நீக்கி யாவையும் முறை கெட வறியவர் முகந்து கொள் கெனா அறைபறை என்றனன் அரசன் கோமகன்” “படை ஒழிந்திடுக! தம் பதிகளே இனி விடைபெறுகுக முடி வேந்தர், வேதியர் நடை உறு நியமமும் நவையின்று ஆகுக! புடை கெழு விழா வொடு பொலிக! எங்கணும்” “ஏழொரு ஏழ் - பதினான்கு ஆண் க்கு வாகளுக்கு விலக்களிக்கப் பட்டன”. என் ன்ன்ன் அறிவித்தான். மேலும் செல்வம் நிறைந்த களஞ் ங்களின் கதவுகள் திறக்கப் பட்டன. எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் முன் பின் வந்தவர்களென்றில்லாமல் வறியவர்கள் அனைவருக்கும் அள்ளிக் கொடுக்கவும், போர் ஒழியட்டும். போர்களில் தோற்றுச் சிறைகளில் வைக்கப் பட்டுள்ள அரசர்களையெல்லாம் விடுதலை செய்யுங்கள். அவர்கள் தங்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்லட்டும். வேதியர்கள் தங்கள் நியமங்களை முறையாக நடத்தட்டும். எங்கும் விழாக்கள்