பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

eый ей — его горелили твореи — 9). запотеей 2| வாழ வேண்டும் என்பதில்லை. எப்படியும் வாழலாம் என்று கூறுபவர்களை இன்றும் காண்கிறோம். இத்தகைய கட்டுப் பாடற்ற நிலை சமுதாயத்தில் உள்ளதைப் போக்கி ஒரு முறையான நிறைவான சமுதாயத்தை உருவாக்கும் லட்சியத்தை இராமன் வடிவில் கம்பன் காட்டுவதைக் காண்கிறோம் அதை, “தக்க இன்ன ! தகாதன இன்ன, என்று ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள மக்களும் விலங்கே, மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே” என்று அராமபிரான் நன்னெறி புகட்டுகிறார். கம்பனின் இந்தக் கவிதை வரிகளுக்கு இலக்கிய உலகில் ஈடு இணையே இல்லை. இது கம்பர் தரும் சிறந்த காட்சிகளிலே ஒன்றாகும். இவ்வாறாகக் கம்பரது “இராமாயண காவியம்” பலவகைகளிலும் தனித்தன்மை பெற்று உயர்ந்து நிற்கிறது. பல பரிமாணங்களையும் கொண்ட உலகப் பெருவடிவமாகக் காட்சியளிக்கிறது. பக்தி நூல் இராமாயணக் கதையைப் பற்றியும் கம்பருடைய காவியத்தைப் பற்றியும் பல தரப்பட்ட எதிரும் புதிருமான கருத்துக்களும் மாறுபட்ட வேறுபட்ட அணுகுதல்களும் உள்ளன. இராமாயணக்கதை ஒரு கட்டுக்கதையென்றும், ஒரு உண்மை நிகழ்ச்சியென்றும், வரலாற்று உண்மை கொண்டதென்றும், ஒரு புனையப் பட்ட இதிகாசமென்றும், அது ஒரு பக்தி நூலென்றும், பண்டிதர் நூலென்றும், இலக்கியச் சிறப்பு மிக்க காவியம் என்றும், பாமரமக்களுக்குரிய மக்கள் காவியமென்றும் அக்கருத்துக்கள் வெளி வந்துள்ளன. இராமாயணக் கதையின் பாத்திரங்கள் அவதார புருஷர்களென்றும், வெறும் கதாபாத்திரங்கள் தானென்றும், இராமகாதை ஒரு புனித நூலென்றும், ஒரு விரிவு பட்ட கதை நூலென்றும், அது ஒரு இந்து தர்ம நூலென்றும், இந்திய மக்கள் அனைவருக்குமுரிய பொது நூலென்றும், இன்னும் அதற்கு மேலும்