பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusйr — «РФ ~Qдаятшй шптіsos» —- ~}: «Fooflsитеғай7 25 பெற்று நிலைத்து நிற்கின்றன. இவை இரண்டும் பாரத நாட்டின் பொதுப் பண் பாட்டின் பகுதியாக இணைந்து இடம் பெற்று நிற்கின்றன. இராமாயணம், வசிட்டர், வியாசர், போதாயனர் வால்மீகி முதலிய சான்றோர்களால் சமஸ்கிருத மொழியில் பாடப் பட்டுள்ளன என்பதை ஏற்கனவே அறிவோம். அதில் வால்மீகி ராமாயணம் மக்களிடம் பிரபலமடைந்துள்ளது. தமிழ் மொழியில் கம்பரும், இந்தி மொழியில் துளசிதாசரும், வங்காளி மொழியில் கிரித்திவாசரும், தெலுங்கு மொழியில் பாஸ்கரரும், மலையாள மொழியில் எழுத்தச்சனும், மராட்டிய மொழியில் முக்தேஸ்வரரும், குஜராத்தி மொழியில் கிரிதரரும், அஸ்ஸாமி மொழியில் மாதவகந்தாலியும் ஒரியா மொழியில் பலராமர் என்பாரும் எழுதிய இராமாயணங்கள் பிரபலமாக மக்களால் போற்றப் படுகின்றன. இத்துடன் நேப்பாளி, உருது, மைதிலி மற்றும் பாரசீக மொழிகளிலும் இராமாயணக் கதை பரவியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பழய ராமகாதை பிரபலமாகப் பரவியுள்ளது. இன்றோ உலக மொழிகள் பலவற்றிலும் இராமாயணக் கதை பரவியுள்ளது. கம்பராமாயணம் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்கிறது. சமண நூல்களிலும் ஜைன ராமாயணம் மிகவும் பிரபலமாக வழங்கப் படுகிறது. கன்னட மொழியில் பம்பா ராமாயணம் என்னும் ஜைன ராமாயணமும் குமார வால்மீகி என்னும் அழைக்கப்படும் நரகரி என்பவர் எழுதிய இராமாயணமும் பிரபலமானதாகக் கருதப் படுகிறது. எனவே இராமாயணம் இந்திய நாட்டின் பழம்பெரும் பேரிலக்கியமாக உயிரோட்டமான பெருங்கதையாக தெய்வீக மணம் கமழும் உன்னதமான காவியமாக இந்திய மக்களிடம் பரவி நிலை பெற்றுள்ளது. தமிழ் மொழியில் கம்ப ராமாயணம் பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழ்ப் பாடல்களைக் கொண்ட மொழி வளமும் கருத்து வளமும் மிக்க அரிய பேரிலக்கியக் களஞ்சியமாக விளங்குகிறது. இராமாயணக் கதைகள், காவியங்களாக, கவிதைகளாக, பாட்டுக்களாக, வசனங்களாக, நாடகங்களாக, நாட்டியங்களாக, கூத்துக்களாக, பாராயணங்களாக, காலச்சேபங்களாக,