பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 27 மகா பாரதக் கதையின் ஒரு பகுதியாகக் கருதப் படுகிறது. இருப்பினும் அது ஒரு தனித் தன்மையான தனி நூலுமாகும்). “பாரதா, எப்போதைப்போது தர்மம் அழிந்து போய் அதர்மம் எழுச்சி பெறுமோ அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன். “நல்லோரைக் காக்கவும் தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்”, என்பது பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தில் உள்ள ஏழாவது எட்டாவது சுலோகங்களாகும் என்பதைப் பலரும் அறிவர். இதில் சம்பவாமி யுகே யுகே என்பது நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களில் ஆழப்பதிந்துள்ள சொற்களாகும். கம்பன் தனது இராமாவதாரக் கதையில் சுந்தரகாண்டம், பிணி வீட்டுப் படலத்தில் இந்திரஜித் விடுத்த பிரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்ட அனுமன் இராவணனுடைய சபையில் கொண்டு போய் நிறுத்தப்பட்டபோத, தான் யாரென்று கூறும்போது: "அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர் இறந்து உகநூறித்தக் கோர் இடர்துடைத்து ஏகஈண்டு பிறந்தனன் தன் பொன்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்”. என்று இராமபிரானின் அவதாரச் சிறப்பை எடுத்துக் காட்டி தான் அந்த இராமபிரானின் துரதன் என்று குறிப்பிடுகிறான். இங்கு மகாகவி கம்பன் அனுமன் வாய் மொழியாக இராமபிரானுடைய அவதாரச் சிறப்பை எடுத்துக் கூறுகிறார். கம்ப ராமாயணத்தில் இராமபிரானின் அவதாரப் பெருமைகளுடன் சேர்த்து திருமாலின் அவதாரங்களான பரசுராமன், வாமனன், நரசிம்மன் ஆகியவைகளின் மகிமைகளைப் பற்றிய குறிப்புகளும் கூறப்படுகிகின்றன.