பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமபிரானை மகா விஷ்ணுவின் அவதாரமாக இந்திய மக்கள் கருதுவதால் நமது மக்களில் பலரும் இராமாயணக் கதையைப் பக்தியுடன் படிக்கிறார்கள், பாராயணம் பண்ணுகிறார்கள். இதனால் கம்பராமாயணமும் பூஜை அறையில் வைத்துப் பூஜிக்கப் பட்டு பயபக்தியுடன் பலராலும் படிக்கப் படுகிறது. பக்தர்கள் இராமனுடைய கதையை அது எந்த மொழியிலிருந்தாலும் அதைப் பூஜை அறையில் வைத்துப் பாதுகாத்துப் படிக்கிறார்கள். ‘வடகலை, தென்கலை, வடுகு, கன்னடம் இடமுளபாடையாதொன்றின் ஆயினும் திடமுளரகு குலத்து இராமன் தன் கதை அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே! ” என்பது இராமாயணத்தின் பெருமையையும் சிறப்பையும் கூறும் பாடலாகும். வடமொழியான சமஸ்கிருதம், தென் மொழியான தமிழ், வடுகு என்று கூறப்படும் தெலுங்கு, கன்னடம், இன்னுமிவை போன்ற இடையிலுள்ள வேறு மொழிகளில் யாதொன்றிலாயினும் அம்மொழியில் இரகு வம்சத்தில் பிறந்த இராமன் கதையை முறையுடன் படிப்பவர்கள், படிக்கக் கேட்பவர்கள் அமரராவர் என்று கம்பராமாயணத்தின் பெருமைகளைப் பற்றிக் கூறும் பகுதியில் உள்ள தனிப்பாடல் கூறுகிறது. கம்பனும் தனது கவி வாக்கில், 'இராவணன் தன்னை விட்டி இராமனாய் வந்து தோன்றி தராதலம் முழுதும் காத்துத் தம்பியும் தானுமாகப் பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பருகுவார்கள் நராபதி ஆகிப் பின்னும் நமனையும் வெல்லுவாரே” என்று வாழ்த்துப் பாடலில் கூறுகிறார். இவ்வாறு பக்தியுடன் இராமாயணத்தைப் பூஜித்துப் படித்து