பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கம்பகாடரும்-இாமாவதாரக் காவியமும்' 30 மரபு வழிக் கல்வியும் மறைந்து பொதுவான ஆங்கிலக் கல்வியும் பொதுக் கல்வியும் மேல்தட்டில் உள்ளவர்கள் மற்றும் சில சிறு பகுதியினரிடம் மட்டுமே பரவியிருந்ததால் இந்திய மொழிகளின் பெருமை மிக்க பண்டைய நூல்களும், சாத்திரங்களும் சாதாரண மக்கள் படித்துப் பயன் பெருமளவிற்கு பரவவில்லை. இந்திய மொழிகளின் நூல்களுக்கு இருந்த பொது அந்தஸ்து நிலை தமிழ் மொழிக்கும் பொருந்தும். எனவே தமிழ் படிப்பு என்பது தனிப் படிப்பாக பண்டிதர்கள் மட்டும் படிக்கும் படிப்பாகவே இருந்தது. தமிழ் மூலம் இதர கலைகளனைத்தையும் படிப்பதென்னும் நிலைமையில்லாததால் தமிழ் மொழியின் அவசியமும் உபயோக மதிப்பும் குறைவாகவேயிருந்தது. ஆங்கிலேயராட்சிக் காலத்தில் தமிழ் மொழியின் அவசியம் ஆட்சித் துறையிலும், கல்வித் துறையிலும் அறிவுத்துறையிலும் மிகவும் குறைவாகவேயிருந்தது. அதனால் தமிழ் மொழியிலும் இதர இந்திய மொழிகளிலுமிருந்த அறிவுச் செல்வங்கள் அடங்கியே கிடந்தனவென்று கூறலாம். ஒரு சிறிய வட்டமாக விருந்தாலும் தமிழ்ப் பண்டிதர்களும், தமிழ்ப் புலவர்களும் கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து கற்றார்கள். அவர்களில் பலரும் அதை பக்தியோடும் தமிழ்ப் பற்றோடும் இலக்கிய ஆர்வத்தோடும் சேர்த்துப் படித்தார்கள். அவர்களுடைய படிப்பில் கம்பன் பாடல்களில் உள்ள கவிதை நயம், சொல் நயம், அசை சீர் அணி முதலியன, மற்றும் இதர இலக்கண இலக்கியத் தன்மைகளும் சிறப்புகளும் அதிகமாக இடம் பெற்றிருந்தன. நமது பக்தர்களும், பண்டிதர்களும் கம்ப ராமாயணக் காவியத்தைப் பூசை அறைகளிலும், நூல் அறைகளிலும் தங்களுடைய உள்ளங்களிலும் மனப்பாடங்களிலும் வைத்துப் பாது காத்தார்கள். அதிகமான அளவில் அச்சகங்களும் அச்சடிக்கப் பட்ட புத்தகங்களும் இல்லாத காலத்தில் அந்தக் கவிதைகளை மனப் பாடம் செய்தும் பாது காத்தார்கள். அவர்கள் இந்த அரிய அறிவுக் கருவூலங்களை அன்னியராட்சிக் காலத்தில் அழியாமல் பாதுகாத்து வைத்திருந்தது, உண்மையிலேயே சிறப்பான பாராட்டுதல்களுக்கும் நன்றி செலுத்தப்படுவதற்கும் உரியவர்களாவார்கள். அன்னியராட்சிக் காலத்தில் இந்திய நாட்டின் பெரிய பேரிலக்கியங்களும், சாத்திரங்களும், அரிய நூல்களுமெல்லாம் புகழ்