பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 3| மண்டிக்கிடந்தன. கேட்பாரற்றும் கிடந்தன. அன்னியராட்சியிலும் பலவேறு படையெடுப்புக்களிலும் போர்களிலும் அழிந்து போன நமது அறிவுச் செல்வங்கள் ஏராளம். இருப்பினும் எஞ்சியிருந்தவைகளைப் பாதுகாத்து வைப்பதில் நமது பக்தர்களும், பண்டிதர்களும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்கள். அந்த வகையில் அவர்கள் நமது வணக்கத்திற்கும், மரியாதைக்குமுரியவர்களாகும். அதே சமயத்தில் இன்றைய புதிய சூழ்நிலையில் நமது பண்டைய இதிகாசங்கள் மற்றும் இதர சாத்திரங்களின் புதிய பரிமாணங்களைக் காண வேண்டும். கம்ப ராமாயணத்தைப் பக்திப் பார்வையுடன் மற்றும் பண்டிதப் பார்வையுடன் இணைத்து இலக்கியப் பார்வையுடன் அதனுடைய சமுதாயத்தன்மைகளையும் கண்டு மக்களிலக்கியமாக அதன் முழு வடிவத்தை அறிய வேண்டும். அவைகளைச் சமுதாயத்தின் பொதுச் சொத்தாக விரிவுப் படுத்திக் கொண்டு செல்ல வேண்டும். இலக்கிய நூல் நமது வேதங்களும், உபநிடதங்களும் இதிகாசங்களும், புராணங்களும், இதர சாத்திரங்களும், சங்க நூல்களும், காப்பியங்களும், பக்தி நூல்களும் சிறந்த பேரிலக்கியங்களாகும். சமுதாய சாரம் கொண்டவைகளாகும். அந்த வகையில் கம்ப ராமாயணம் நமது நாட்டின் தலை சிறந்த பேரிலக்கியங்களில் ஒன்றாகும். அன்னியர்கள் நம்மை அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் நமது பண்டைய இலக்கியச் செல்வங்களை முழுமையாக உணர முடியாமல் அடிமைத்தனத்திலும் அறியாமையிலும் மூழ்கியிருந்தோம். விடுதலை உணர்வு பெற்று விழிப் படைந்த போது நமது இலக்கியங்களைப் பற்றியும் அதிகமாக உணரத் தொடங்கினோம். சூரியன் கீழ் திசையில் தோன்றத் தொடங்கும் போது, இருள் நீங்கி பலபலவென விடியத் தொடங்குகிறது. உலகின் உயிர்ப் பொருள்கள் ஜடப் பொருள்களனைத்தும் புதிய ஒளியைப் பெறுகின்றன. புதிய புதிய காட்சிகளைப் பெறுகின்றன. உலகம் முழுதும் புதிய உயிர்த் துடிப்பைப் பெறுகிறது. மலைகளும், காடுகளும், மரங்களும், செடிகொடிகளும் புதிய ஒளியைப் பெற்றுப் பிரகாசிக்கத்