பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கம்பநாடரும் 'இராமாவதாரக் காவியமும்’ 34 பொருத்தத்துடன் இணைக்க வேண்டுமென்று பாரதி வழி காட்டியுள்ளார். எனவே நமது மரபு, பண்பாடு, இலக்கியம், வரலாற்றுச் செல்வங்கள், ஆகியவற்றின் சிறப்புகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அந்த வழியில் தேசிய விடுதலை இயக்கமும் அடிப்படை மக்களின் முழுமையான விமோசன இயக்கங்களும் சமூகச் சீர்திருத்த இயக்கங்களும் பாரத சமுதாயத்தின் மறுமலர்ச்சி இயக்கங்களும் நமது இலக்கியச் செல்வங்களைப் புதிய காலத்திற்கேற்ற புதிய கண்ணோட்டத்தில் படிக்கவும், விளக்கவும், பரப்பவும் முயற்சிகள் எடுத்துள்ளன. நமது உன்னதமான மரபுகளையும் வரலாற்றுப் பாரம்பரியச் செல்வங்களையும் கலாச்சாரச் செல்வங்களையும் கற்றுக் கொள்வதற்கும் படிப்பதற்கும் கிரகித்துக் கொள்வதற்கும் நமது இலக்கியங்களும், அனுபவங்களும் வழி காட்டுகின்றன. அதில் முந்திய கால இலக்கியங்களைப் பொதுவாகப் படிப்பதும் கற்றுக் கொள்வதும் மட்டுமல்லாமல் அதன் ஆன்மாவைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், கவியுள்ளத்தின் ஆழ்ந்தக் கருத்துக்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய விளக்கங்கள் காண வேண்டும். புதிய வரலாற்றுக் கண்ணோட்டத்தில் படிக்கவும், கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழகத்திலும் இதர பேரிலக்கியங்களைப் போலவே கம்பனுடைய இராமாவதாரக் காவியத்தைப் படிப்பதிலும் விளக்குவதிலும் புதிய பார்வைகளும் கருத்துக்களும் வெளிப்பட்டன. கம்பன், வள்ளுவன், இளங்கோ, வள்ளலார், பார போன்றாரைக் கற்க, அவர்களுடைய கருத்துக்களைப் பரப்ப| பல மன்றங்களும் கழகங்களும் தோன்றின. குறிப்பாக நாடு விடுத்லை பெற்ற பின்னர், இத்தகைய அமைப்புகள் அதிகரித்துள்ளதைக் காண்கிறோம். உலக இலக்கியங்கள், குறிப்பாக ஐரோப்பிய இலக்கியங்கள் ஆகியவற்றின் மரபுகளின் தாக்கங்கள் நமது நாட்டின் இலக்கிய