பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. сыйшьт-сый “Зиллиольше»лле% காவியமும்’ $0 கருத்துக்களைப் பரப்பினார்கள். அவர்களுக்குக் அடுத்த தலைமுறையில் வந்த அறிஞர்களும் கம்பனைப் பற்றிப் பல இலக்கிய ஆராய்ச்சிகளையும் நடத்திப் பேசியும், எழுதியும் கம்பனை மேலும் அதிகமாகப் பரப்பியுள்ளார்கள். காரைக்குடிக் கம்பன் கழகம் அதன் நிறுவனர்களான கம்பரடிப்பொடி சா.கணேசனார், தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கனார் முதலியோர்களும் கவிச் சக்கரவர்த்தி கம்பனின் சிறப்புகளைப் பரப்புவதில், கம்பனின் இலக்கியத்தைச் செல்வத்தைப் பருகவும், பரப்புவதற்குமான பல புலவர்களையும் அறிஞர்களையும் அறிமுகப் படுத்தி அருந்தொண்டாற்றியுள்ளார்கள். அதேபோல கோவை, சென்னை, புதுச்சேரி, அருப்புக்கோட்டை, இராமநாதபுரம் முதலிய பல இடங்களிலும் கம்பன் கழகங்களும் மன்றங்களும் தோன்றிக் கம்பனுடைய இலக்கியப் பெருமைகளைப் பரப்பி வருகிறார்கள். தமிழ்ப் புலவர் சாமி.சிதம்பரனார் அவர்கள் சிறந்ததொரு தமிழறிஞர். அவர் கம்பராமாயண நூலைச் சுருக்கித் தொகுத்து வெளியிட்டுள்ளார். அந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய சென்னை கம்பன் மன்றத்தின் செயலாளர் கோ.சங்கரராஜன் அவ்வுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “தமிழ் இலக்கியத்தின் கொடு முடியாகவும், தமிழ் மொழியின் வற்றாத வளத்திற்கும், சொல்லாற்றலுக்கும் ஒர் எடுத்துக் காட்டாகவும், தமிழ் மக்கள் எண்ணி வந்த அவர்களுடைய இதயக் கனவுகள் இணையற்ற லட்சியங்கள் முதலியவற்றின் வெளியீடாகவும் அவரது கடவுட் கொள்கைக்கும் சமய சிந்தனைக்கும் நிலைக்களமாகவும், உலகில் என்றும் 'அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்னும் அடிப்படைக் கருத்தை நிலை பெறச் செய்து பழி பாவங்களும், கொடுங்கோன்மைகளும் பெருகுதலைக் கண்டு தளராமல் அறவழியிற் செல்வோர் தருமத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்வதாகவும் விளங்கும் பெருங் காப்பியம் கம்ப ராமாயணம்” என்று குறிப்பிடுகிறார். இந்த அருமையான கருத்துக்களுக்கு விளக்கம் தேவையில்லை. தமிழிலக்கியத்தின் சிகரமாகக் கம்பராமாயணத்தை கோ.சங்கரராசன் குறிப்பிடுவது சாலப் பொருத்தமாகும்.