பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ыйшейт — 5әсъ горетили штів»a —=у збәләләөйт. 37 “தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பராமயணத்திற்குரிய ஸ்தானம் மிகமிக முக்கியமானது”என்றும்,'தமிழிலக்கியத்தின் புகழையெல்லாம் தம்புகழாக்கிக் கொண்ட பெருங் கவிஞர் கம்பர்” என்றும் இவர் இந்தப் பெருங் காவியத்தை இயற்றாதிருந்திருந்தால் உலக மகா காவியங்களிடையே எந்த ஒரு தமிழ் நூலையும் கொண்டு போய் வைக்க முடியாது” என்று கு.அழகிரிசாமி சக்தி காரியாலயத்தின் கம்பராமாயண வெளியீட்டின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அதே முன்னுரையில் திரு.கு.அழகிரிசாமி அவர்கள் மேலும் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “கம்பராமாயணத்தின் ஒப்பற்ற பெருமையை அறிய வேண்டுமானால் அதை இலக்கிய நோக்குடன் மட்டும் படிக்க வேண்டும். படித்து விட்டு தமிழில் உள்ள பிற காவியங்களையும் ஹோமர், விர்ஜில், தாந்தே,மில்டன்,கதே.வால்மீகி முதலிய பிற மொழிக் காவியங்களையும் படிக்க வேண்டும். அப்போதுதான் கம்பரின் அரிய கவிதா சக்தியை உணர முடியும்.” கம்பராமாயணக் காவியம் சிறந்த கவிதா வளம் கொண்டது மட்டுமல்ல. சிறந்த தமிழ் மொழிவளம் கொண்டது. சிறந்த பாத்திரப் படைப்புகளைக் கொண்டது, சிறந்த கருத்துவளம் கொண்டது, நமது நாட்டின் தத்துவ ஞானம் அறிநெறி, அரசியல் நெறி, ஒழுக்தநெறி, மற்றும் சகோதரத்வம், மனிதாபிமானம், தருமம் வெல்லும் என்னும் உறுதியான நம்பிக்கை முதலியவை பற்றிய ஆழ்ந்த கருத்து வளம் கொண்டதுமாகும். எனவே தமிழ்ப் புலவர்கள் பலரும் கம்பனைப் பெரிதும் பாராட்டி அதை மிகப் பெரும் இலக்கியச் செல்வமாக, தமிழின் பெருமையாகக் கருதிக் கம்பனைப் படிக்கிறார்கள். தமிழ் நாட்டிலும் தமிழ் கூறும் நல்லுலகத்திலும் கம்பராமாயணத்தை நுணுக்கமாகக் கற்ற அறிஞர்கள் ஆயிரக் ಆನನ್ದ இருக்கிறார்கள் என்று கூறலாம். கம்பனைப் பாராட்டியும், அவருடைய காவியத்தை ஆய்வு செய்தும் எண்ணற்ற கட்டுரைகளும், நூல்களும் வெளி வந்துள்ளன. பெரும் தமிழ்ப் புலவர்கள், தமிழ் அறிஞர்கள் பலரும் கம்பராமாயணத்திற்கு உரை எழுதியும் பல விளக்க நூல்கள் எழுதியும் அவை வெளி வந்துள்ளன. ஆயினும் கம்பனையும் அவரது மாபெரும் காவியத்தையும் வெறும் இலக்கிய வரம்பிற்குள் மட்டும் நிறுத்தி விட முடியாது,.