பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கம்பநாடரும்-இராமாவதாரக்காவியமும் 38 கம்பனின் மகா காவியத்தை ஆதாரமாகக் கொண்டு பலவேறு துறைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். கம்பனுடைய பாடல் வரிகளின் நேரடிப் பொருளை மட்டுமல்லாமல், அந்த வரிகளுக்கிடையில் மறைந்துள்ள பொருளையும் ஆய்வு செய்ய வேண்டும். கம்பன் தனது காவியத்தில் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, ஆற்றுச் சிறப்பு ஆகியவைகளைப் பாடியுள்ளார். உழவர், வணிகர் மற்றும் பல தொழில் வினைஞர்களைப் பற்றியும் பாடியுள்ளார். தமிழையும் காவிரியாற்றையும் உவமை காட்டிப் பல இடங்களிலும் பாடியுள்ளார். இயற்கையுடன் இணைந்து இசைந்து வாழ வேண்டிய அவசியத்தையும் இயற்கை யைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் பாடியுள்ளார். மருத்துவ மலை அதன் மூலிகைகளின் சிறப்புகள் பற்றிக் கூறியுள்ளார். சேதுபாலம் பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் சிறப்பானவைகளாகும். பலவேறு தத்துவ ஞானக் கருத்துக்களையும் ஆங்காங்கு மிகவும் நுட்பமாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். அரசியல் தத்துவங்களையும் அறநெறித் தத்துவங்களையும் பல இடங்களிலும் மிக நுட்பமாக தெளிவு பட விளக்குகிறார். வைணவத்தின் இரண்டு அடிப்படையான தத்துவங்களான பக்தி தத்துவத்தையும், சரணாகதி (பிரபத்தி) தத்துவத்தையும் மிகவும் சிறந்த முறையில் தத்துவம் நடைமுறைச் செயல்பாடு ஆகியவற்றை இணைத்து மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். போர்முறைகள், போர் நெறிகள், போர்த்தந்திரங்கள், போர்த் தயாரிப்புகள், வியூகம் உபாயங்கள், ஆயுதங்கள், ஆயுதப்பிரயோகம், அணிசேர்க்கை, அணிவகுப்பு, தாக்குதல், தற்காப்பு முறைகள், துரதர், ஒற்றர் முதலியவை பற்றியெல்லாம் மிகச் சிறப்பாகக் கம்பர் தனது காவியத்தில் பேசக் காண்கிறோம். கைகேயி இராமனை அழைத்து வனத்திற்குச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்ட போது “தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவமேற்கொண்டு, பூழி வெம்கானம் நண்ணிப் புண்ணியத்துறைகள் ஆடி ... வா” என்று குறிப்பிடுகிறாள். ஆனால் இராமன், காடு செல்லும் போது வில்லின் துணையோடு செல்கிறான்.