பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கம்பநாடரும் “{3}ппольшғыттеo esлыпшаршй” 42 கம்பராமாயணத்தையும், இதர இராமாயணங்களையும் எல்லாக் கோணங்களிலும் பரிமாணங்களிலும் ஆராய்ச்சி செய்து அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். எதிர்மறைக்கருத்துக்களாயினும் அவை அளவோடு இருப்பது நல்லது. அவை தீயன பயத்தலாக இருப்பது நல்லதல்ல. வக்கிரங்களும், நிந்தனைகளும் அவதூறுகளும் எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளன. காலப் பயணத்தில் அவை நிற்காது, நிற்கவுமில்லை என்பதையும் காண்கிறோம். கம்பராமாயணக் கதையில் தீவிரமான சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் சமூக மாற்றக் கருத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. அவைகளைத் தேவையான அளவில் அள்ளிப் பருகலாம். இராமன் குகனைச் சகோதரனாக ஏற்கிறான். குகன் இராமனுக்கு மீனும், தேனும் உணவாகத் தருகிறான். அவைகளை அன்புடன் இருவரும் சேர்ந்த சமமாக சமபந்தியில் அமர்ந்த சாப்பிடுகிறார்கள். இராமன் சக்கிரீவனைச் சந்திக்கிறான். ஒழுக்கமில்லாத பித்தாய விலங்கினைத் தன் சகோதரனாக ஏற்கிறான். இருவரும் சமமாக அமர்ந்து உணவருந்துகிறார்கள். இராமனும் வீடணனும் சகோதரர்களாக ஒன்றாக நின்று போரை நடத்துகிறார்கள். இராமன் பரசுராமனைச் சந்திக்கிறான். இராமன் சத்திரியன். பரசுராமன் பிராமணன். இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அந்த மோதலில் சத்திரியன் வெற்றி பெறுகிறான். பிராமணன் தோல்வியடைந்து தனது சக்தியனைத்தையும் சத்திரியனுக்குக் கொடுத்து விட்டுச் சந்நியாசம் போய் விடுகிறான். பரசுராமனும் இராமனும் இருவரும் திருமாலின் அவதாரங்களேயாகும். இராவணன் பிரம தேவன் வழியில் தோன்றியவன். அதன்படி பார்ப்பன குலத்தைச் சேர்ந்தவன். பார்ப்பன குல இராவணனைச் சத்திரியகுல இராமன் வென்று முடித்தான். இந்திர சித்தன் நிகும்பலையாகத்தின் போது வீடணனை இகழ்ந்து பேசுகிறான் அப்போது ‘பனி மலர்த் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கெல்லாம் தனி முதல் தலைவன் ஆனாய், உனை வந்து அமரர் தாழ்வார் மனிதருக்கு அடிமையானாய்’ என்று இந்திரசித்தன் வீடணனை இகழ்ந்து பேசியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். எனவே இங்கு ஆரிய - திராவிட இனவாதத்திற்குமிடமில்லை.