பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கம்பனுடைய கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 46 கம்பன் தனது கடவுள் வாழ்த்துப் பாடல்களை வேதசமயத்தின் உயர்ந்த தத்துவ நிலையின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். அவருடைய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் அவர் எழுதியுள்ள “இராமாவதார மகாகாவியத்தின் ஒவ்வொரு காண்டத்திலும் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று ஒரு உயர்ந்தத் தத்துவ நிலையை எட்டுகிறது. பாரத நாட்டின் பண்டைய காலத்தில் வேதங்களின் கருத்துக்களின் அடிப்படையிலமைந்த கடவுட் கொள்கைகளே மக்களிடையில் நிலை கொண்டிருந்தன. பின்னர் புத்த சமண சமயக் கொள்கைகளும் இந்தியாவெங்கும் பரவின. அநேகமாக இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் சாதாரண மக்களில் பெரும் பாலோர் புத்த சமண சமயங்களுக்குப் பின்னால் சென்று விட்டனரென வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் வேத சமயக் கருத்துக்களுக்கும் மறுபக்கம் புத்த சமண சமயக் கருத்துக்களுக்குமிடையில் வலுவான பரவலான கருத்துப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதற்கான இலக்கியச் சான்றுகளை நமது மத்திய கால இலக்கியங்களில் ஏராளமாகக் காண முடிகிறது. இறுதியில் வேத சமயமே பாரத நாட்டில் நிலை பெற்று இன்று அநேகமாக புத்த சமண சமயங்களெல்லாம் இந்து சமயத்தின் பகுதிகளைப் போல இணைந்து விட்டன என்று கூறலாம். இன்று இந்து சமயமென்றழைக்கப் படும் வேத சமயம் ஒரே கடவுளையும், ஒரே வழிபாட்டு முறையையும் ஒரே போதனையையும் கொண்டதல்ல என்பதையறிவோம். அது ஒரு விசாலமான தர்மமாக வாழ்க்கை நெறியாக அனைத்தளாவிய தெய்வக் கொள்கையாக இந்திய மக்களிடத்தில் பரவலாகப் பதிந்திருக்கிறது. வேதசமய நம்பிக்கைகளில் எண்ணற்ற கடவுள்களும், தேவதைகளும், கணங்களும் குறிப்பிடப்படுகின்றன. ஆயினும் வேதங்களின் மையக்கருத்தாக உலகமனைத்தையும் ஒரே ஆத்மாவாகவும் அதன் பல வேறு பல கோடிக்கணக்கான வடிவங்களையெல்லாம் ஒரே மரத்தின் கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகள், விதைகளாகக் காண்பதே பலவேறு தெய்வக்