பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. slot-SDIso-u" st-eut- Slestersonsule Supus Estersonsulte 48 3. காணாபத்யம்: கணபதி என்னும் பெயரில் பரமாத்மாவை வழிபடுவதாகும் 4. சைவம்: சிவ வழிபாடு 5. வைணவம்: திருமால் வழிபாடு 6. சாக்தம்: சக்தி வழிபாடு ஐந்திரத்திரத்திற்கு பதிலாக கெளமாரம் என்று குறிப்பிடுவாரும் உண்டு. கெளமாரம் என்பது முருக வழிபாடு. இன்று கூட வங்காளத்தில் சக்தி வழிபாடும் மகாராஷ்டிரத்தில் கணபதி வழிபாடும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இவை தவிர தென்னாட்டில் முருக வழிபாடும், பொதுவாக நமது நாடு முழுவதிலும் சிற்சில பகுதி மக்களிடம் ஞாயிறு வழிபாடும் அக்னி, வாயு, வருணன் வழிபாடுகளும் நடப்பில் உள்ளன. சிலப்பதிகாரக் காப்பியத்தில் இந்திர விழா முக்கிய இடம் பெற்றிருப்பதையும் மங்கல வாழ்த்துப் பாடல்களில் திங்கள், ஞாயிறு Mாமழை ஆகியவை போற்றப்படுவதையும் காண்கிறோம். இந்த வழிபாடுகளை முன்வைத்துப் பல புராணங்களும் எழுந்துள்ளன. அத்துடன் நம்முடைய மகத்தான இதிகாசங்களைான இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் திருமாலின் திரு அவதாரங்களாக இராமனையும, கண்ணனையும் முதல் தெய்வங்களாக முன்னிருத்தியுள்ளன. ஆதி சங்கரர் ஒன்று படுத்திய ஆறு சமயங்களில் வைணவமும், சைவமும் இரு முக்கிய பிரிவுகளாக பாரத நாடு முழுவதிலும் நிலை பெற்றிருக்கின்றன. அத்துடன் மற்ற வழி பாடுகளும் அடுத்த நிலைகளில் தொடர்ந்து நீடித்து வருகின்றன. “ கல்லிடைப்பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருளிது என்னத் தொல்லையில் ஒன்றேயாகித் துறை தொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்ததன்றே”