பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை-அ. சீனிவாசன் 49 என்று ஆற்று வெள்ளத்தைப் பலவேறு சமயங்களும் கூறும் பொதுவான பரம்பொருளுக்கு ஒப்பிட்டுக் கம்ப நாடர் சமய ஒற்றுமைக்கு வித்திடுகிறார். பொதுவாக இந்தச் சமயங்களனைத்தும் படைத்தல், காத்தல் அழித்தல் (நீக்கல்) தொழில்களுக்குப் பொறுப்பாகப் பிரம்மா, திருமால், சிவபெருமான் ஆகிய தெய்வங்களை முன் நிறுத்திச் சாத்திரங்கள் இலக்கியங்கள் பலவற்றையும் படைத்துள்ளார்கள். வேத சமய வழிகாடுகளாக இன்று மிகவும் பிரபலமாக நிலைபெற்றுள்ள வைணவம், சைவம் ஆகிய பிரிவுகளுக் கிடையிலும் ஒற்றுமையும் வேற்பாடுளும் இருக்கினற்ன. கருத்து மோதல்களும் ஏற்பட்டுள்ளன. இந்தக் கருத்து மோதல்களைத் தவிர்த்து அரியும் சிவனும் ஒன்று என்னும் ஒற்றுமைக்கும் சமரசத்திற்கும் பல முயற்சிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அரியும் சிவனும் ஒண்னு அறியாதவன் வாயிலே மண்ணு ' என்று கூட பாமர மக்களின் பழமொழியும் நாட்டு மக்களிடத்தில் பழக்கத்திலுண்டு. இவ்விரண்டு பிரிவுகளும் புத்த சமணத்தையும் எதிர்த்து மோதியுள்ளன. தமிழகத்திலும் சைவத்திற்கும் சமணத்திற்கும் நடந்த கருத்துப் போராட்டங்கள் பிரசித்தமானவை. அதேபோல புத்த சமணத்திற்கெதிராக வைணம் நடத்தியுள்ள கருத்துப் போராட்டங்களும் பிரபலமானவை. மற்ற சமயங்களுக்கெதிரான கருத்து மோதல்களில் வைணவத்திற்கும் சைவத்திற்குமிடையில் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவபெருமான் ஆதி கடவுளாகவும், பின்னர் ஏற்பட்ட சமுதாய வளர்ச்சிக் காலத்தில் திருமாலும் தோன்றி மக்கள் மனதில் நிலைபெற்றுள்ளதாகச் சில ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள். நமது நாட்டின் இந்து சமயக் கோயில்களில் பெரிய பிரபலமானச் சிறப்புமிக்க கோயில்களாகச் சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் இருக்கின்றன. இரு கோயில்களும் அடுத்தடுத்து இருப்பதையும் காண்கிறோம். திருப்பதியில் பெருமாள் கோயிலும் காளத்தியில் சிவன்Mோயிலும் உள்ளன. அதே போல காஞ்சீபுரத்தில்