பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ғылшейт — бәсъ ғарғлили штвовал —ән абидәләайт 5|| “உலகம்யாவையும் தாமுளவாக்கலும்” என்று தொடங்கும்போது கம்பன் பொது நெறியைத்தான் குறிப்பிடுகிறார். அதில் இவ்வுலகில் இப்பேருலகில் ஒவ்வொரு பொருளும் தோன்றி நிலைபெற்றுப் பின் நிலைமாற்றம் கொண்டு இடைவிடாத வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருப்பதுதான் இயக்கவியல் தத்துவமாகும். இந்தப் பேருலகின் சகல பொருள்களும் (உயிர்ப்பொருள்களும் ஜடப்பொருள்களும் பரமா ணு முதல் பேரண்டம் வரையிலுமான சகல பொருள்களும்) அவையவைகளின் தகுதிக் கேற்ப இடைவிடாமல் தோன்றியும் நிலைபெற்றும் மாறிக் கொண்டுமிருக்கின்றன. அவை இடைவிடாமல் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. பழைய நிலையிலிருந்து மாற்றங்கொண்டு புதிய நிலையை அடைகின்றன என்பது அடிப்படையான வளர்ச்சியியல் தத்துவமாகும். கம்பன் இக்காலப் பொருள் முதல் வாத இயக்கவியல் தத்துவத்தை முன் வைத்தவர் என்று கூறமுடியாது. அக்காலத்தில் அக்கருத்து நிலை முழுமை பெற்றிருந்ததாகவும் கூற முடியாது. ஆயினும் கம்பன் காலத்திலும் அதற்கு முன்னும் கடுமையான சமயப் போராட்டங்களும் தத்துவப் போராட்டங்களும் நடந்துள்ளன. புத்தமும், சமணமும் வேதங்களையும் வேதகாலக்கடவுள்களையும் அதன் பின்னர் வந்த உபநிடத தத்துவங்களையும் பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் அதன் பின்னர் வந்த புராணங்களையும் வேற்றுமைகளையும் எதிர்த்தும் நிராகரித்தும் பெரிய அளவில் பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் பல கருத்துப் போராட்டங்களையும் நடத்தியுள்ளன. அவைகளின் செல்வாக்கு இந்திய மக்களின் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் பெரும் அளவில் பலவகைத் தாக்கங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அதனால் வேத சமயங்களும் அவைகளின் பகுதியாக சைவ வைணவ சமயங்களும் புத்த சமணக் கருத்துக்களையும் விழுங்கி, ஜீரணித்து தனதாக்கிக் கொண்டு தங்களுடைய பழைய நிலைகளைக் காலத்திற்கேற்றவாறு மாற்றிக் கொண்டும் மறுமலர்ச்சி பெற்று வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஆதிசங்கரரும், உடையவரும் மத்துவரும் மற்றும் பல ஞானிகளும், மகான்களும் இப்பெரும் மாற்றங்களைக் கொண்டு வருவதில் வரலாறு பூர்வமாக மிகச் சிறந்த பங்கினை ஆற்றியுள்ளார்கள். ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமி ழகத்தில் மிகச் சிறந்த பங்கினையும் இத்துறையில் ஆற்றியுள்ளார்கள். அவைகளின் தாக்கங்களும் கம்பருடைய கடவுட் கொள்கையிலும் ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.