பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. subuggyeo–u st–eau – okÈTercosulub supunë 6kBTerreosub 52 உலகம், முத்தொழில், முடிவில்லாத விளையாட்டு, முக்குணம், அதில் முதல் குணம், வேதம், மெய்ந்நெறி, முதலிய பல பதங்களையும் பால காண்டக் கடவுட்கொள்கைப் பாடல்களில் காண முடிகிறது. ஆக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் முடிவில்லாமல் இடைவிடாமல் நடைபெறும் நிகழ்ச்சிகளாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என்னும் கருத்துக் கம்பனின் முதலாவது காண்டக் கடவுள் வாழ்த்துப்பாடலின் மய்யமான கருத்தாகும். கம்பனுடைய கடவுட் கொள்கை காண்டம் தோறும் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன என்பதை அடுத்தடுத்த காண்டங்களுக்கு நாம் செல்லும் போது தெளிவாகக் காணலாம். இரண்டாவதான அயோத்தியா காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலில் பஞ்ச பூதங்கள், ஊன், உயிர், உணர்வு போல் உள்ளும் புறமும் நிறைந்தவன் இராமன் என்னும் பொருளில் கம்பன் குறிப்பிடுவதைக் காண்கிறோம். "வானின்றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும் ஊனும் உயிரும் உணர்வும் போல உள்ளும் புறத்தும் உளன் என்ப கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக். கோல் துறந்து கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் காத்தகழல் வேந்தே” என்று கம்பன் குறிப்பிடுகிறார். அனைத்து உயிர்ப் பொருள்களின் உடலும், உயிரும், உணர்வும் பஞ்ச பூதங்களின் (நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம்) பலவகையான சேர்மானங்களினால் ஆனவை. அவைகள் உள்ளும் புறமும் இணைந்து நிற்கும் மகாசக்தியான இராமன், கூனியும் சிறிய தாயும் இழைத்த கொடுமைகளைத் தாங்கி நாட்டையும், ஆட்சி அதிகாரத்தையும் இழந்து கானும் கடலும் கடந்து இமையோர்களின்