பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு_சமுதாயப்-பார்வை-அ-சினிவாசன் 53 இடுக்கண்களைத் தீர்த்தவன் என்று கம்பன் உள்ளம் உருகப் பாடியுள்ளதைக் காணலாம். இங்கு இயற்கை சக்திகளையும் மனிதனுடைய ஊன் உயிர் உணர்வுகளையும் இணைத்து வல்லமை படைத்த கடவுளை சகல கஷ்டங்களையும் சமாளித்து நல்லதைச் செய்யும் இராமனுக்கு ஒப்பிட்டுக் கம்பன் பாடியுள்ளார். இங்கு இயற்கை சக்திகளை மனித சக்தியுடன் இணைப்பதும், மனிதன் தனக்கு ஏற்படும் சகல துன்பங்களையும் தாங்கி செயற்கரிய காரியங்களைச் செய்து முடிப்பதும் அது தெய்வசக்திக்கு ஈடானது என்னும் பொருளைக் கம்பன் தனது குறிகளால் காட்ட முயல்வதைக் காண்கிறோம். இந்தப்பாடல் மிக விரிவான தத்துவ ஞானப் பொருள் மிக்கது. இதை விரிக்கிற்பெருகும். மூன்றாவது காண்டமான ஆரண்ய காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் மேலும் ஒரு படி முன் செல்கிறது. தன் தன்மையில் எந்த விதமான மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் காட்டாமல், நிறைந்த பல வகையான உருவங்களிலும் வேற்றுமையில்லாமல் கலந்திருக்கிற, படிக்கப்படிக்கப் புதிய உணர்வுகளையும் புதிய உண்மைகளையும் தெளிவு படுத்தக் கூடிய வேதங்கள், அவைகளைப் படிக்கும் வேதியர்கள், அவ்வேதங்களுக்கு விளக்கமளிக்கும் பிரிவுரையாளர்கள் முதலியோரால் கூட காணமுடியாத ஆதி கடவுள், அவர் எம் அறிவினுக்கு அறிவு என்று பொருள்படும் வகையில், பேதியாது நிமிர்பேத உருவம் பிறழ்கிலா!ஒதியோதி உணரும் தோறும் உணர்ச்சி உதவும் /வேதம் வேதியர் விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா/ஆதி தேவர் அவர், எம் அறிவினுக்கு அறிவு”! அரோ என்பது ஆரண்ய காண்டக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும். அறிவே தெய்வம் என்பது மகாகவி பாரதியின் கருத்துமாகும். “ ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் - பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளிரோ