பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. sub-geo-ul. கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 54 மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள் - எத னுTடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வமென்றோதி அறியீரோ சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளிரோ” என்றெல்லாம் பாரதி பாடியுள்ளதைக் காண்கிறோம். இராமாயணக் கதையில் ஆரண்யா காண்டம் கடுமையான சிக்கல்களும், மோதல்களும், துன்பதுயரங்களும் நிறைந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட காண்டமாகும். அயோத்தியா காண்டத்தில் கூனியும் சிறிய தாயும் கொடுமையிழப்ப, துன்பம் தொடங்குகிறது. ஆரண்யா காண்டத்தில் சூர்ப்பனகை தோன்றி, இராமனின் துன்ப துயரங்கள் உச்சத்திற்குச் செல்வதற்குக் காரணமாகிறாள். கரன், திரிசரன், தூடணன் முதலியோரைப் போர்க்களத்தில் சந்திக்க வேண்டியதேற்படுகிறது. அந்த நேரடிப்போர் இராம.இலக்குவர்களை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் மாரீசனின் மாயச்சூதும், இராவணன் மறைந்து நின்று சீதையை அபகரித்துச் சென்றதும் இராமனையே கூடக் கடுமையாக பாதித்துவிட்டது. நான் இருந்து என்ன பயன், "துறப்பனோ உயிரைச் சொல்லாய்” என்று கூறி, சோர்வடைகிறான். சோர்வடைந்த இராமனுக்கே இலக்குவன் 'ஆறுதல் கூறுகிறான். “ நின்று இனி நினைவது என்னே? நெருங்கி அவ்வரக்கர் தம்மைக் கொன்றபின் அன்றோ வெய்ய கொடுந்துயர் குளிப்பது ” என்று இலக்குவன் உறுதி கூறித் தெம்பூட்டுகிறான். அதைக் கேட்ட இராமன் “ அவ்வழி இளவல் கூற, அறிவனும் அயர்வு நீங்கி, இவ்வழி இணைய எண்ணின் ஏழைமைப்பாலாது ” என்று கூறியதாகக் கம்பன் கூறுகிறார். இங்குதான் அயர்வு நீங்கி, அறிவு மேலோங்கி வருகிறது. துன்பதுயரங்களை எதிர்க்கும் துணிவு ஏற்படுகிறது. எனவேதான் கம்பன் இக்காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலில் அறிவுக்கு முதல் முக்கியத்வம் கொடுத்துப் பேசுகிறார்.