பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. opugolotud கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 56 "அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவெனப் பூதமைந்தும் விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்றவிக்கம்: கலங்குவது எவரைக் கண்டால்? அவர் என்ப கைவில் ஏந்தி இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதியாவார். என்பது கம்பன் பாடலாகும். மாலையில் மங்கலான நேரத்தில் ஒரு கொடியைப் பார்க்கும்போது அது ஒரு பாம்பைப் போல் தோன்றுகிறது. எனவே, “உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் உண்மையல்ல, அவை மாயத் தோற்றங்களாகும்”. என்பது நமது நாட்டின் சில தத்துவங்கள் கூறும் கருத்துக்களில் ஒன்றாகும் கானல் நீர் என்பது ஒரு பொய் தோற்றமாகும். ஆனால் அந்தப் பொய்த்தோற்றம் உண்மை வெளிப்பட்டவுடன் மறைந்து விடுகிறது. எனவே “ உலகம் மாயை, அதுவொரு பொய்த்தோற்றம் ” என்பதைக் கம்பன் ஏற்றுக் கொள்ளவில்லை.

  • உலகெல்லம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாகவுடையது". மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது, பின் மாறுகிறதேயெனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்யில்லை, அது கடவுளின் திருமேனி என்று பாரதி தனது பகவத் கீதைத் தமிழாக்க நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

ஐம்பெரும் பூதங்கள் என்னும் இயற்கை சக்திகளான நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகியவை ஒன்றோடொன்று கலந்து பலவேறு சேர்க்கைகள் மூலம் உலகில் பல வேறுபட்ட பொருள்களாகக் காட்சியளிக்கின்றன. பிரபஞ்சத்திலுள்ள சகலவிதமான பொருள்களும் பஞ்ச பூதங்களின் பலவகையான சேர்மானங்களேயாகும் என்னும் தத்துவக் கருத்தைக் கம்பன் ஏற்றுக் கொண்டிருப்பதாகக் தெரிகிறது. இவ்வாறு இயற்கை சக்திகளின்