பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

நாட்டு மக்கள் கம்பன் கழகங்கள் அமைத்து தெருவெல்லாம் கம்பன் புகழைப் பரப்ப வேண்டும், அவனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இந்நூல் வேண்டிக் கொள்கிறது.

கம்பனுடைய முக்கியமான சில சமுதாயக் கருத்துக்களை இந்நூல் விவரித்துக் காட்ட முயற்சிக்கிறது. கம்பனுடைய கடவுட் கொள்கையையும், சமயக் கொள்கையையும் எடுத்துக் கூறுகிறது. கடவுட் கொள்கையில் ஒரு சமரசம் காண முயல்கிறது. பல்வேறு சமயங்கள் கூறும் அறிய கருத்துச் செல்வங்களைப் பாராட்டியும், மறுபக்கம் சமயங்கள் விளைவிக்கும் சமுதாயப் பிணக்குகளையும் இந்நூல் சாடுகிறது.

கம்பன் தனது மகா காவியத்தில் மானிடத்தை மிக உயர்ந்த மட்டத்திற்குக் கொண்டு செல்கிறார். “வேறுளகுழுவை யெல்லாம் மானுடம் வென்றதம்மா’ என்னும் அருமையான சொற்றொடர் கம்பனுடைய தலை சிறந்த படைப்பாகும். மனிதன் இயற்கையுடனும், இயற்கை சக்திகளுடனும், இதர உயிரினங்களுடனும் இணைந்து, கூட்டுச் சேர்ந்து கூட்டணி அமைத்து செயற்கரிய செயல்களைச் செய்து காட்டி, சகலவிதமான தடைகளையும் தாங்கியும், தாண்டியும் பாவங்களைத் தோற்கடித்து, அறத்தை வெற்றியடையச் செய்யும் ஒரு மகத்தான அவதாரக் கடமையை நிறைவேற்றுவதைக் கம்பன் விவரிப்பதை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது.

கம்பன் தனது காவியத்தில் மனித சகோதரத்துவத்தை மிகவும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறார். மனிதனையும், பறவைகளையும், விலங்கையும் கூட தனது சகோதர வட்டத்திற்குள் கொண்டு வந்து காட்டுகிறார். கம்பன் தனது காவியத்தின் சகோதரர்களையும், அவர்களின் பண்புகளையும், உடன் பிறந்த உணர்வுகளையும் கம்பீரமாக எடுத்துக் கூறுவதை இந்நூல் விவரிக்கிறது.

கம்பனுடைய அரசியல் கருத்துக்களை இந்நூல் சற்று விரிவாக ஆராய்கிறது. அயோத்தியின் அரசியலில் ஏற்படும் நிகழ்ச்சிகள், வசிட்டனுடைய அரசியல் கருத்துக்கள், பரதன் உறுதி{{{pagenum}}}