பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. subuggyeo-ul s-au – Genereosulub supunë Genereosune 58 இல்லையென்றாலும் இல்லைதான், இருக்கிறது என்றாலும் அதுவும் சரிதான். கடவுளின் குடிவாழ்க்கையே இப்படியிருக்குமானால் அந்தக் கடவுளை நம்பி நாம் எப்படி நம்முடைய பிழைப்பை நடத்த முடியும் என்று கம்பன் கூறுவது நமது நாட்டின் நமது நாட்டு சதாரணமக்களின் குறிப்பாக வேத சமயக் கடவுட் கொள்கையின் பொதுக் கருத்துக்களுக்கு கொடுப்பதாகவுள்ளது. இருப்பினும் கண் மூடித்தனமான பல நம்பிக்கைகளுக்குமப்பால் ஒரு தத்துவ நிலைக்குக் கம்பனுடைய கடவுட் கொள்கை அமைந்திருப்பதைக் காண்கிறோம். கம்பனுடைய கடவுட் கொள்கை ஒரு தத்துவ நிலையில் அமைந்திருப்பதற்கு மேலும் பல சான்றுகளைக் காணலாம். தற்கால இந்திய தத்துவ ஞானக் கற்றறிவாளர்களில் ஒருவரான பேராசிரியர் தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா அவர்கள் தன்னுடைய “இந்திய நாத்திகம்” என்னும் நூலில் “இந்திய தத்துவ ஞானிகளில் மிகப் பெரும்பாலானவர்கள் அடிப்படையில் நாத்திகவாதிகளாகவே இருந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். எனவே இந்தியத் தத்துவ ஞானக் கருத்துக்களில் நாத்திகவாதமும் ஒன்று என்பதை இந்திய மூல இலக்கியங்களில் நாம் பரவலாகக் காண முடிகிறது, காலத்தால் மாறி வந்துள்ள பல உண்மை நிலைகளையும் நாம் காண வேண்டும். அந்த உண்மை நிலைகளும் கம்பனுடைய கருத்துக்களில் அதிகமான அளவில் தாக்கம் கொண்டுள்ளன. நாம் நம்முடைய இன்றைய தன்னிலைக் கருத்துக்களிலிருந்து கம்பனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதைக் காட்டிலும் கம்பனுடைய கால நிலையிலிருந்தும் இந்திய மக்களின் பொதுப் பண்பாட்டு நிலையிலிருந்தும் கம்பனைக் கண்டு நாம் அவருடைய கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். காலத்தால் கம்ப ராமாயண இராமன் கடவுள் நிலைக்கு உயர்த்தப் பட்டு திருமாலின் திரு அவதாரமாக அவனைக் காண்கிறோம். வால்மீகியின் இராமன் மனிதனாகவே சிறந்த மனிதனாக சிறந்த வீரனாக, சிறந்த ராஜ குமாரனாக, சில நேரங்களில் சில இடங்களில் கடவுள் நிலைக்கு உயர்த்தப் பட்ட மனிதனாக நமக்குக் காட்டப் பட்டிருக்கிறான்.