பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கம்பனுடைய கடவட்கொள்கையம் சமயக் கொள்கையும் 60 குறிப்பிடுவது இந்த நூலின் நோக்கத்திற்கு ஆசி வழங்கியதைப் போலமையும். இராஜாஜி அவர்கள் தனது இராமாயண நூலின் தொடக்கத்தில் வால்மீகியும் கம்பனும் என்றும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். “வால்மீகி பகவான் ராமாயணம் பாடிய காலமும் பூர் ராமச்சந்திரன் அவதரித்து இம்மண்ணுலகில் வாழ்ந்த காலமும் ஒன்றே என்பது புராணம் வாசிப்பவர்களுடைய பரம்பரைக் கொள்கை, உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால் வால்மீகி ரிஷியானவர் ராமாயணத்தைப் பாடியதற்கு முன்னமேயே அதாவது புராதன காலந் தொட்டே "சீதா ராமசரித்திரம்” மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற்றாண்டுகள் வாய் வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது. கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த றுநீராமசரிதத்தை எடுத்துக் கொண்டு, அதற்கு வால்மீகி பகவான் நூல்வடிவம் கொடுத்தாற் போல் தோன்றுகிறது. அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம். வாலியைக் கொன்றமுறை, அதில் காணும் நியாயக் குறை சீதையைக் காட்டுக்கு அனுப்பிய அநீதி இவை போன்ற இன்த்ரிம் பல சிக்கல்கள். வால்மீகி ரிஷியின் காவியத்தில் இராமருடைய நடவடிக்கைகள் ஈசுவர அவதாரமாக வைத்து எழுதவில்லை. சில அதிகாரங்களிலும் இங்கு மங்கும் சுலோகங்களிலும் தெய்வ அவதார விஷயத்தைச் சொல்லி வந்தாலும் மொத்தத்தில் வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் ராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன், வீரபுருஷன், அபூர்வமான தெய்வீக நற்குணங்கள் பெற்றவன் அம்மட்டே. கடவுளாக வேலை செய்யவில்லை. N வால்மீகி முனிவரின் காலத்திலேயே ரீ ராமனைப் பற்றிய அவதாரக் கொள்கை ஒரளவு ஜனங்களின் மனதில் இருந்து வந்தது. வால்மீகி ராமாயணம் இயற்றிய பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கம்பரும் துளசிதாசரும் ராமாயணம் பாடினார்கள். இதற்குள் ரீ ராமன் மகாவிஷ்ணுவின் அவதாரமே என்பது நாட்டில் நன்றாக ஊர்ஜிதப் பட்டுப்போன கொள்கையாகி விட்டது. ராமன் என்றாலும் கிருஷ்ணன் என்றாலும் மகாவிஷ்ணுவே. மகாவிஷ்ணு என்றால்