பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு_சமுதாயப்-பார்வை-அ.-சீனிவாசன் 61 ராமனே - கிருஷ்ணனே - இந்த நிலைக்கு ஜனங்களின் கொள்கை வந்து விட்டது. இதற்கு ஏற்ப பக்தியும் கோயில்களும் வழிபாடும் ஏற்பட்டு ஸ்திரமாகி விட்டது. “மக்களுடைய நம்பிக்கையும் வழிபாடும் இவ்வாறு பரிணமி -த்து விட்டபிறகு கம்பரோ துளசிதாசரோ மீண்டும் ராமனை எப்படி வெறும் வீரனாக வைத்துப் பாட இயலும்? அப்படிப் பாட முயன்றாலும் அது விணாகும். கம்பரும் துளசிதாசரும் பரிபூரண பக்தர்கள். ஆழ்வார்களேயாவார்கள். அவர்கள் தற்கால சரித்திர ஆராய்ச்சியாளர் அல்லது நெடுங்கதை எழுத்தாளர்களைப் போன்றவர்கள் அல்ல. இராமாவதாரத்தை வால்மீகியைப் போல் வெறும் ஒரு விர புருஷனைப் பற்றிய கதையாக எழுத முடியாத நிலையிலும் காலத்திலும் கம்பரும் துளசிதாசரும் பாடினார்கள். இராமனை மானிடப் பிறவியில் அடக்கக் கம்பருடைய பக்தி இடம் தரவில்லை. ஆனபடியால் கம்ப ராமாயணத்தில் அடிக்கடி மிகரசமான இடங்களில் இராமன் மகாவிஷ்ணுவே, கடவுளே, அனைத்திலும் பரவி நிற்கும் பரம்பொருளே என்று வைத்து, மனதை உருக்கும் முறையில் அற்புத அழகோடு பாடியிருக்கிறார்.” இந்தக் கட்டுரையில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் கருத்துக்கள் மிகச் சிறந்தவொரு உண்மையை வெளிப்படுத்துகிறது. வெறும் வற்றல் ஆராய்ச்சியாளர்களுக்கு நல்ல பதிலாகவும் அமைந்திருக்கிறது. இனிக் கம்பன் தனது கவி வாக்காகவும் தனது உயர்ந்த இனிய கதா பாத்திரங்கள் வாயிலாகவும் இராமபிரானைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி அவரது அவதாரப் பெருமையை பக்திச் சுவையோடு பாடியுள்ள மிக அருமையான பாடல் குறிப்புகளைக் காணலாம். இராமன் விஸ்வாமித்திர மாமுனிவருடன் செல்கிறான். முனிவரின் தவத்தைக் காக்கிறான் அவருடைய தவத்தைக் கெடுக்க வந்த தாடகையை மாய்த்தான். தவம் முடித்து முனிவரும் இராமனும் இலக்குவனும் நடந்து சென்று கொண்டிருந்த போது இராமனுடைய கால் துகள் பட்டுக் கல்லாய்க் கிடந்த அகலிகை உயிர் பெற்றெழுகிறாள் என்னும் கதைப் போக்கில் இராமனின் கை