பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 63 “பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செல வைத்து மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்நின்ற வித்தகனை மைவண்ணம் கருமுகில் போல் திகழ் வண்ண மரகதத்தின் அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே' என்று ஆழ்வார் பாடியுள்ளதும் மிக அழகான பாடல் வரிகளாகும். பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த இலக்குமியும் நாராயணனும் பிரிந்து போய் சீதையாகவும் இராமனாகவும் பிறந்து மீண்டும் திலையில் சந்திக்கிறார்கள் என்பது கவிவாக்கு. சீதையும் இராமனும் சாதாரண கதாபாத்திரங்களல்ல. பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தவர்கள். மனிதப் பிறவி எடுத்து பூவுலகில் ஒன்று சேருகிறார்கள். அது அவதாரச் சிறப்பும் மகிமையாகும். அதைத் தனது கவிதையில் “மருங்கிலா நங்கையும் வசைஇல் ஐயனும் ஒருங்கிய இரண்டுடற்கு உயிரொன்று ஆயினார் கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?” என்று மிக அற்புதமாகக் கவிஞர் கூறுகிறார். இராமனும் இலக்குவனும் விஸ்வாமித்திர முனிவருடன் மிதிலைக்கு வந்து ஜனக மகாராஜனுடைய மாளிகைக்கு வருகிறார்கள். இராமன் வில்லை எடுத்து வளைத்தான். அந்த வில் பெரிய சத்தத்துடன் முறிந்து விட்டது. மக்கள் மகிழ்ச்சி -யடைந்தார்கள். பலரும் முயன்றும் முடியாமல் இப்போது இராமன் அந்த வில்லை எடுத்து விட்டான். இந்த ஆற்றல் மிக்க இராமன் யார்?