பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. *tbuggyeo–u. கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 66 பரசுராமன் ஒரு பிராமணன். ஜமதக்னி முனிவருடைய குமாரர். மிகுந்த வல்லமை மிக்கவர். அவருடைய தாயின் உயர்வான கற்பு நிலைக்கு மாசு ஏற்படுவதற்கும் அத்தாய் கொல்லப் படுவதற்கும் ஒரு சத்திரியன் காரணமாக இருந்தான் என்பதனால் கூடித்திரிய குலத்தையே அழித்து விடப் போவதாக சூளுரைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசர்களைக் கொன்று வெற்றி பெற்று உலகையெல்லாம் காசிப முனிவரென்னும் அந்தணருக்குக் கொடுத்ததாகப் பழைய கதைகள் குறிப்பிடுகின்றன. நமது புராணங்களிலும் இதி காசங்களிலும் பிராமணர்கள் - கூடித்திரியர்கள் மோதல்களும், சண்டைகளும் பிரசித்தம். ஆதி சமுதாயத்தில் வேதங்கள் உபநிடதங்கள் காலத்தில் சமுதாயத்தில் அந்தணர்கள் முதல்நிலை ஆதிக்கம் கொண்டிருந்தார்கள். அவர்களே பெரும்பாலும் ஆண்டான்களாக இருந்தார்கள். பின்னர் படிப்படியாகச் சமுதாயக் குழுக்கள் நிலை பெற்று நிலையான குடியிருப்புகள் ஏற்பட்ட போது படிப்படியாக அரசுகள் தோன்றி மன்னராட்சி முறை ஏற்பட்டது. அப்போது அரசர்களின் ஆதிக்கம் வளர்ந்தது. அந்தணர்களுக்கும் அரசர்களுக்கும் ஆதிக்கப் போட்டியும் தலைமைப் போட்டியும் அதன் காரணமாக முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்திய சமுதாயத்தில் குறிப்பாக சிந்து கங்கை சமவெளிப் பகுதிகளில் பிராமணர்களுக்கும் கூடித்திரியர்களுக்கும் இடையிலேற்பட்ட ஆதிக்கச் சண்டை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நடை பெற்றதாகக் கூறப்படுகிறது. விஸ்வாமித்திரருடைய வரலாறும் இந்தச் சத்திரியர் - பிராமணர் மோதலைப் பிரதி பலிப்பதாகவே இருக்கிறது. இராமாயணத்தில் பால காண்டத்தில் விஸ்வாமித்திரர் ஒரு மிக முக்கியமான பாத்திரமாகும். கதையின் முக்கியமான திருப்பங்களுக்கும் சீதாராமத் திருமணத்திற்கும் அவரே காரணமாக அமைகிறார். விஸ்வாமித்திர முனிவர் ஒரு அரசனாக இருந்து தன்னுடைய அரச பொறுப்புக்களைத் தனது மக்களிடம் கொடுத்து விட்டுக் கடும் தவங்கள் செய்து முனிவரானவர். தவத்திலும் மிகவும் கடுமையான முறையில் ஈடுபட்டுப் பலவகைச் சோதனைகளையும் கடந்து பாடுபட்டுக் கடைசியில் வெற்றியும் பெற்றவர். விஸ்வாமித்திரரின் வாழ்க்கைப் பயணத்தில் வசிட்டருக்கும் அவருக்குமிடையில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.