பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusйт — «PQ5 «Qрёлшй шптіsos» —-гу: «Foofkалтағай 67 அதில் முதல் கட்டத்தில் விஸ்வாமித் திர ருக்கு வெற்றி கிடைக்க வில்லை. பின்னர் அந்த ண முனிவர்களின் தம்பிரதாயங்களையும் சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் င္ဆို႔ႏိုင္တူ என்னும் சத்திரிய அரசனை சுவர்க்கத்திற்கு அனுப்பி, நடுவழியில் நின்றுவிட்டது. ஆயினும் அத்திரிசங்கும் |9ے சப்தரிஷிகளுடன் வானத்தில் எப்போதும் பிரகாசிக்கும் நட்சத்திரங்கனாக நிலை பெற்று விட்டான். மீண்டும் விஸ்வாமி த்திரருடைய தவமும், கடுமையான விடா முயற்சியும் தொடர்ந்தது. கடைசியில் விசுவாமித்திரருக்கும் வசிட்டருக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டு கூடித்திரிய விசுவாமித்திரருக்கும் பிராமண அதிகாரம் எல்லாம் உண்டு, பிராமணருக்கு அவரும் சமமானவர் என்று வசிட்டராலேயே அங்கீகரிக்கப்பட்ட பிரம்மரிஷி பட்டம் விஸ்வாமி த்திர மகாமுனிவருக்கும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பிராமணர்களுக்கும் கூடித்திரியர்களுக்கும் இணக்கமும் உடன்பாடும் ஏற்பட்டு, கூடித்திரியர்கள் அரசர்களாகவும், பிராமணர்கள் குருக்களாகவும், அமைச்சர்களாகவும் அமர்ந்து சமுதாயத்தின் தலைமைப் பொறுப்புகளை நிறைவேற்றினார்கள் என்று கூறலாம். கூடித்திரிய - பிரம்மரிஷியான விஸ்வாமித்திரர் இராம இலக்குவர்களைத் தன் அழைத்துச் சென்று தாடகையை வதம் செய்து, தனது) தவத்தை முடித்து, கல்லாகக் கிடந்த அகலிகையை உயிர் பெற்றெழச் செய்து, இராமனது கை வண்ணத்தையும், கால்வண்ணத்தையும் உலகிற்குக் காட்டினார். தொடர்ந்து அரசகுமாரர்களை மிதிலைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சிவதனுசை எடுத்து வளைத்து ஒடிக்கச் செய்து இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் முடித்து விட்டு, விடை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். தசரதனும் இராஜகுமாரர்களும் தங்கள் படை பரிவாரங்களுடன் திரும்பும் போது பரசுராமன் குறுக்கே வருகிறார். இவர்களைச் சந்திக்கிறார். பரசுராமன் (பிராமணன்) குறுக்கே வந்து இராமனுக்கு (கூடித்திரியனுக்கு) சவால் விடுகிறார். பரசுராமன் (பிராமணன்) மிகுந்த ஆவேசத்தோடு, ஊழிக் காலத்தின் முடிவைப் போல உமையாள் கேள்வனைப் போல வந்து இராமனுக்கு முன்பாக நின்றான். ‘மிதிலையில் நீ ஒடித்த வில் முன்பே ஒடி பட்ட வில். இதோ என் கையில் உள்ள வில்லும் அதுவும் ஒன்றாகப் பிறந்தவை.