பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கம்பனுடைய கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 68 அதைச் சிவனும் இதைத் திருமாலும் கையில் ஏந்திப் போர் புரிந்தனர். சிவதனுசு முறிந்து விட்டது. அதுவே மிதிலையில் இருந்தது. அதையே நீ எடுத்து மீண்டும் முறித்தாய். திருமாலின் தனுசு எனது தந்தை மூலம் என்னிடம் வந்தது. இதை நீ எடுத்து விடு, பார்க்கலாம்” என்று இராமனுக்கு (கூடித்திரியனுக்கு) சவால் விடுகிறான். இது ஒரு சகாப்தத்தின் சவாலாக வெளிப்பட்டது. புதுயுகத்தை நோக்கிப் பழைய யுகம் விடும் சவாலாக வெளிப்பட்டது. திருமாலின் அவதாரப் பெருமை பரசுராமனிடமிருந்து இராம பிரானுக்கு இடமாற்றம் ஏற்படும் படியான ஒரு அபூர்வமான அற்புதமான காட்சியை கம்பன் நமக்குக் காட்டுகிறார். கம்பன் கூறும் அந்தத் தெய்வீகக் காட்சியைப் பாருங்கள். வல்லமைமிக்க பரசுராமன் பெரும் புயலுக்கும் வேகமான ஒரு ஆவேசத்தோடு எதிர் வந்த போது தசரதனும் அவனுடைய படைகளும் நடுங்குகின்றன. பத்து திசைகளிலும் தனது படைகளை வெற்றியுடன் செலுத்தும் ஆற்றலும் வல்லமையும் மிக்க தசரதன் என்று பெயரும் புகழும் பெற்ற மாமன்னனே பரசுராமனைக் கண்டவுடன் கலங்குகிறான். நடுங்குகிறான். அத்தசரதன் பரசுராமனிடம் “உலகம் முழுவதையும் தாங்கள் வென்று அதைக் காசிப முனிவருக்கு (பிராமணர்களுக்கு)க் கொடுத்த தாங்கள் வல்லமை மிக்கவர், அருள் மிக்கவர், நாங்கள் சாதாரணமானவர்கள். நாங்கள் சிவனுமல்ல, அரியுமல்ல, அயனுமல்ல, சிறிய மானிடர் நாங்கள் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல. எங்களுக்கு அபயமளிக்க வேண்டுகிறேன். நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. நாங்கள் எளியவர்கள், எங்களிடம் உங்களுடைய வல்லமையைக் காட்டியென்ன பயன்” என்று நடுக்கத்துடன் அந்த பிராமண முனிவரின் கால்களில் விழுந்து மாமன்னன் தசரதச் சக்கரவர்த்தி அழுகிறார். அந்தக் காட்சியைக் கம்பன் தனது பாடல்களில் காட்டுகிறார். “அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அறைவான் புவனம் முழுவதும் வென்றொரு முனிவற்கு அருள் புரிவாய்