பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusйт –ёәQ5 «Qрғытшй шптіъюви– ~~}, costofkипчай 69 சிவனும் அரிஅயனும் அலர், சிறு மானிடர் பொருளோ இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான். தசரதன் தன்னையும் தனது உயிரையும் உயிருக்கும் மேலான இராமனையும் பரசுராமனுக்கு அபயமாகக் கூறிச் சரணடைகிறான். தசரதனுக்கு இராமன் மீதுள்ள அளவுக்கு மீறிய பாசத்தினாலும் அந்த இராமனுக்கு எந்தவிதமான தீங்கும் நேர்ந்து விடக் கூடாது என்னும் ஆத்திர அவசர ஆவலினாலும் முனிவனிடம் அபயம் கோருகிறான் எனக் கொள்ளலாம். "விளிவார் விளிவது தீவினை விழைவார் உழையன்றோ? களியால் இவன் அயர் கின்றன. உளவோ? கனல் உமிழும் ஒளிவாய் மழு வுடையாய் பொர உரி யாரிடை யல்லால் எளியார் இடை வலியார் வலி என் ஆகவ” என்றான் உங்க்ளுடைய கோபம் எல்லாம் தீவினை செய்யும் வல்லவர்களிடம் தானே செலுத்தப் பட வேண்டும். இந்த இராமன் எந்தவிதமான செல்வச் செருக்கும் கொள்ளவில்லை. எந்தத் தீவினைகளையும் செய்யவில்லை. நல்ல காரியங்களெதையும் அவன் மறந்து விடவுமில்லை. நெருப்பைக் கொட்டும் ஒளிமிக்க சக்தி வாய்ந்த மழுவாயுதம் உன் கையிலுள்ளது. போராடுவதற்கு உனக்கு நிகராகவுள்ளவர்களிடம் தானே நீ செல்ல வேண்டும்? வலிமைமி க்க தாங்கள் உங்கள் வலிமையை எளியவர்களாகிய எங்களிடம் காட்டினால் உங்களுடைய வலிமைக்குத் தகுதியாகாது என்றெல்லாம் புலம்பி பரசுராமனுடைய காலடிகளில் தசரதன் வீழ்ந்தான் என்று கம்பன் கூறுகிறார். தசரதனுடைய வேண்டுகோளையும் புலம்பலையும் பரசுராமன் சிறிது கூட சட்டை செய்யவில்லை. அவனுடைய குறியெல்லாம்