பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. asibuggyeol-u asi-ou- Claroircosulto gupurē Claroircosub 70 இராமனை நோக்கித்தான் இருந்தது. இராமனை நோக்கிக் கூறுகிறான், “உலகெலாம் முனிவர்க்கு ஈந்தேன் உறுபகை ஒடுக்கிப் போந்தேன் அலகில் மாதவங்கள் செய்து ஒர் அருவரை இருந்தேன், ஆண்டைச் சிலையை நீ இறுத்த ஒசை செவியுறச் சீறி வந்தேன் மலைகுவன் வல்லையாகின் வாங்குதி தனுவை யென்றான்” என்ற பரசுமாரன் கூறுகிறார். உலகையெல்லாம் வென்று அதைக் காசிப முனிவரிடம் கொடுத்து விட்டு எனது பகை யனைத்தையும் (கூடித்திரிய குலம் முழுவதையும்) அடக்கி ஒடுக்கிவிட்டு அளவற்ற தவங்களைச் செய்து ஒரு சிறந்த அழகிய அருமையான மலையின் மீது அமர்ந்து அமைதியாக இருந்து கொண்டிருந்தேன். அப்போது நீ மிதிலையில் வில்லை ஒடித்த ஒசை கேட்டது. அதைச் செவியுற்றுச் சீறி யெழுந்து வந்தேன். என்னுடன் போர் புரிய உனக்குத் துணிவும் வல்லமையும் இருக்குமாயின் என் கையில் உள்ள இந்தத் திருமால் தனுவை வாங்குவாயாக வென்று ப்ரசுராமன் கூறுவதைக் கம்பன் மிக அழகாகச் சுட்டிக் காட்டுகிறார். மாமுனிவரான பரசுராமனுடைய இந்த சவாலை ஏற்று இராமன் புன்முறுவலுடன் "நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக” “என்று கூறி அந்த வில்லைச் சுலபமாக வாங்கி வளைத்தான். அவ்வில்லை வளைத்துக் கொண்டு வேதவித்தகனான பரசுராமனிடம் இராமன் கூறுகிறான் 'பூதலத்தரசை யெல்லாம் பொன்று வித்தனையென்றாலும் வேதவித்தாய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய்